/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ விவேக் வித்யாலயா பள்ளி; பிளஸ் 2 தேர்வில் அபாரம் விவேக் வித்யாலயா பள்ளி; பிளஸ் 2 தேர்வில் அபாரம்
விவேக் வித்யாலயா பள்ளி; பிளஸ் 2 தேர்வில் அபாரம்
விவேக் வித்யாலயா பள்ளி; பிளஸ் 2 தேர்வில் அபாரம்
விவேக் வித்யாலயா பள்ளி; பிளஸ் 2 தேர்வில் அபாரம்
ADDED : மே 11, 2025 11:50 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, விவேக் வித்யாலயா மெட்ரிக் பள்ளி, பிளஸ் 2 பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
பள்ளி மாணவி காவ்யா, 595 மதிப்பெண் பெற்று முதலிடத்தையும், ஹரிவர்மன் 594 மதிப்பெண்கள் பெற்று இரண்டாம் இடத்தையும், மாணவிகள் தனுஸ்ரீ மற்றும் காஞ்சனா ஆகியோர் தலா, 588 மதிப்பெண்கள் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், கணினி பயன்பாடு, கணக்குப்பதிவியல், வணிகவியல் போன்ற பாடங்களில், 40 மாணவர்கள் நூறு மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளனர்.