/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பத்ரகாளியம்மன் கோவிலில் விமான கோபுர பாலாலயம் பத்ரகாளியம்மன் கோவிலில் விமான கோபுர பாலாலயம்
பத்ரகாளியம்மன் கோவிலில் விமான கோபுர பாலாலயம்
பத்ரகாளியம்மன் கோவிலில் விமான கோபுர பாலாலயம்
பத்ரகாளியம்மன் கோவிலில் விமான கோபுர பாலாலயம்
ADDED : பிப் 12, 2024 12:30 AM
பொள்ளாச்சி:பொள்ளாச்சி பத்ரகாளியம்மன் கோவிலில், விமான கோபுரம் பாலாலயம் வரும், 15ம் தேதி நடக்கிறது.
பொள்ளாச்சியில், 100 ஆண்டுகளுக்கு மேலாக பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் விசேஷ நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன.
கோவிலில்கும்பாபிேஷகம் நடந்து, 22 ஆண்டுகள் ஆகியது.மீண்டும் கும்பாபிேஷகம் நடத்த கோவில் நிர்வாகம் ஆலோசித்துகும்பாபிேஷகத்துக்காக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
இதற்காக, விமான கோபுர பாலாலயம் நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 14ம் தேதி மாலை, 5:30 மணிக்கு மங்கள இசை, விநாயகர் பூஜை, புண்ணியாகவாஜனம், வாஸ்துசாந்தி, கலசஸ்தாபனம், முதற்கால வேள்வி பூஜைகள் நடக்கின்றன.
வரும், 15ம் தேதி காலை, 8:00 மணிக்கு, மங்கள இசை, விநாயகர் வழிபாடு காலை, 9:30 மணிக்கு இரண்டாம் கால யாகம் துவக்க பூஜைகள் நடக்கின்றன.
காலை, 10:00 மணிக்கு மேல், 11:00 மணிக்குள், திரவியாஹூதி, பூர்ணாஹூதி, விமான கோபுரம் பாலாலயம், மஹா தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, பிரசாத வினியோகம் செய்யப்படுகிறது.
இதற்கான ஏற்பாட்டினை, பரம்பரை அறங்காவலர் சுகுமார், செயல் அலுவலர் தமிழ்செல்வன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.