/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தார் சாலை அமைக்க எதிர்ப்பு; கிராம மக்கள் மனு அளித்தனர் தார் சாலை அமைக்க எதிர்ப்பு; கிராம மக்கள் மனு அளித்தனர்
தார் சாலை அமைக்க எதிர்ப்பு; கிராம மக்கள் மனு அளித்தனர்
தார் சாலை அமைக்க எதிர்ப்பு; கிராம மக்கள் மனு அளித்தனர்
தார் சாலை அமைக்க எதிர்ப்பு; கிராம மக்கள் மனு அளித்தனர்
ADDED : ஜூன் 23, 2025 11:31 PM

அன்னுார்; அக்கரை செங்கப்பள்ளி ஊராட்சி, பச்சா கவுண்டனுாரைச் சேர்ந்த மக்கள், அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உமா சங்கரி, மகேஸ்வரி ஆகியோரிடம் நேற்று மனு அளித்தனர். பின்னர் அவர்கள் கூறுகையில், 'பல ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது கருப்பராயன் கோவில் முதல், பஞ்சாயத்து எல்லை வரை 1,200 மீ., தூரத்திற்கு, தார் ரோடு போடும் பணியை துவக்கி உள்ளனர். ஆனால் இதில் நான்கு இடங்களில் மழை நீர் செல்லும் பள்ளம் உள்ளது. அந்தப் பள்ளத்தில் சிறு பாலம் (கல்வெட்) அமைக்காமல், தார் ரோடு அமைத்தால் விரைவில் மழையில் நான்கு பள்ளங்களில் தார் ரோடு அரிக்கப்பட்டு சென்று விடும்.
இதனால் இந்த பாதையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். எனவே, தற்போது துவக்கியுள்ள தார் சாலை போடும் பணியை நிறுத்த வேண்டும். நான்கு இடங்களில் சிறுபாலம் அமைத்த பிறகு தார் சாலை அமைக்க வேண்டும்,' என்றனர்.
ஒன்றிய பொறியாளர்களை சம்பந்தப்பட்ட இடத்திற்கு அனுப்பி ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மக்களிடம் சமாதானம் கூறினர்.