/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வெள்ளாடு வளர்ப்பில் கிராம மக்கள் ஆர்வம் வெள்ளாடு வளர்ப்பில் கிராம மக்கள் ஆர்வம்
வெள்ளாடு வளர்ப்பில் கிராம மக்கள் ஆர்வம்
வெள்ளாடு வளர்ப்பில் கிராம மக்கள் ஆர்வம்
வெள்ளாடு வளர்ப்பில் கிராம மக்கள் ஆர்வம்
ADDED : ஜூன் 06, 2025 11:11 PM
பொள்ளாச்சி,; பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராம மக்கள் சிலர், எந்த பருவ நிலையையும் தாங்கும் வெள்ளாடு வளர்ப்பில் ஆர்வம் காட்டுவதாக, கால்நடைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி சுற்றுப்பகுதி கிராமங்களில், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாகும். பால் உற்பத்திக்கான கறவை மாடுகளுக்கு அடுத்த படியாக, ஆடு வளர்க்கும் தொழிலில் பலர் ஈடுபட்டு வருகின்றனர்.
மாடு மற்றும் செம்மறி ஆடுகள் வளர்ப்பதை காட்டிலும், வெள்ளாடு வளர்ப்பதன் வாயிலாக, இரு மடங்கு லாபம் சம்பாதிக்கலாம் என, கால்நடை துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து கால்நடைத்துறையினர் கூறியதாவது:
வெள்ளாடு வளர்ப்பில், தீவனத்தை தேடிச் செல்ல வேண்டியதில்லை. ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி செல்வதற்கு மட்டும் ஆட்கள் இருந்தால் போதும். அவ்வகையில், 10 கிலோ எடை கொண்ட ஒரு வெள்ளாடு, 5,000 ரூபாய் முதல் 6,000 ரூபாய் வரை விற்பனையாகிறது.
மழை மற்றும் கோடை காலம் என, எந்த பருவ நிலையையும் வெள்ளாடு வளர்ப்பில் பாதிப்பு ஏற்படுத்தாது. இவை தவிர, நோய் தாக்குதலும் வெகு குறைவாகவே இருக்கும்.
தவிர, ஆண்டிற்கு இரு முறை குட்டிகள் ஈனும். இதனால், இரு ஆண்டுகளுக்குள், ஒரு மந்தை அளவிற்கு வெள்ளாடுகளின் எண்ணிக்கை பெருகி விடும். அதன் காரணமாக, கிராமங்களைச் சேர்ந்த பலர், வெள்ளாடு வளர்ப்பில் ஆர்வம் காட்டுகின்றனர்.
இவ்வாறு, அவர்கள் கூறினர்.