Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ காய்கறி விதை, பழ செடி தொகுப்பு வினியோகம்

காய்கறி விதை, பழ செடி தொகுப்பு வினியோகம்

காய்கறி விதை, பழ செடி தொகுப்பு வினியோகம்

காய்கறி விதை, பழ செடி தொகுப்பு வினியோகம்

ADDED : ஜூலை 04, 2025 11:02 PM


Google News
சூலுார்; ஊட்டச்சத்து வேளாண் இயக்க திட்டத்தின் கீழ், காய்கறி விதை தொகுப்பு, பழ செடி தொகுப்பு வழங்கும் பணி துவங்கியது.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில், ஊட்டச்சத்து வேளாண் இயக்கம் என்ற புதிய திட்டத்தை முதல்வர் நேற்று துவக்கி வைத்தார்.

தக்காளி, கத்தரி, மிளகாய், வெண்டை, கொத்தவரை மற்றும் கீரை விதைகள் அடங்கிய காய்கறி விதை தொகுப்பு, பப்பாளி, கொய்யா, எலுமிச்சை உள்ளடங்கிய பழ செடி தொகுப்பு, 100 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

சூலுார் வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் ஷர்மிளா கூறுகையில், ''காய்கறி விதை மற்றும் பழ செடி தொகுப்பு பெற விரும்பும் விவசாயிகள், பொதுமக்கள் தங்கள் ஆதார் நகலுடன், சூலுார் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகலாம். 0422 - 2990 014 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

https://tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்திலும் முன்பதிவு செய்யலாம்.

''பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us