/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வீரமாத்தி அம்மன் திருவிழா கோலாகலம் வீரமாத்தி அம்மன் திருவிழா கோலாகலம்
வீரமாத்தி அம்மன் திருவிழா கோலாகலம்
வீரமாத்தி அம்மன் திருவிழா கோலாகலம்
வீரமாத்தி அம்மன் திருவிழா கோலாகலம்
ADDED : மார் 26, 2025 09:08 PM

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையம் வீரமாத்தியம்மன் கோவிலில் நேற்று திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
கிணத்துக்கடவு, செட்டியக்காபாளையம் வீரமாத்தியம்மன் கோவில் திருவிழா, கடந்த, 25ம் தேதி, கருப்பராயன் அழைத்து வருதல், கலசம் முத்தரிது அம்மன் அழைக்கும் நிகழ்வுடன் துவங்கியது.
நேற்று, காலை, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை நடந்தது. தொடர்ந்து, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்வில், செட்டியக்காபாளையம் சுற்றுப்பகுதி மக்கள் பலர் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.