Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இரு பாலருக்குமான போட்டியில் வாயு அணி ஒட்டுமொத்த 'சாம்பியன்'

இரு பாலருக்குமான போட்டியில் வாயு அணி ஒட்டுமொத்த 'சாம்பியன்'

இரு பாலருக்குமான போட்டியில் வாயு அணி ஒட்டுமொத்த 'சாம்பியன்'

இரு பாலருக்குமான போட்டியில் வாயு அணி ஒட்டுமொத்த 'சாம்பியன்'

ADDED : மார் 18, 2025 05:27 AM


Google News
கோவை, : கிருஷ்ணா கல்லுாரியில் நடந்த விளையாட்டு விழாவில், இரு பாலருக்குமான பிரிவில் வாயு அணி ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்றது.

ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியில் விளையாட்டு விழா நடந்தது. இதில், அக்னி, சிவப்பு, நீலம், ஆகாஷ், பச்சை, பிரித்வி, மஞ்சள், வாயு ஆகிய பெயர்களுடைய அணிகளில் மாணவ, மாணவியர் பல்வேறு போட்டிகளில் பங்கேற்றனர்.

ஆண்களுக்கான பேட்மின்டன், செஸ், கால்பந்து போட்டிகளில் வாயு அணியும், கூடைப்பந்து போட்டியில் ஆகாஷ் அணியும், கிரிக்கெட், கபடி, டேபிள் டென்னிஸ் போட்டிகளில் அக்னி அணியும், வாலிபால் போட்டியில், பிரித்வி அணியும் முதல் பரிசு வென்றன.

பெண்களுக்கான பேட்மின்டன், டேபிள் டென்னிஸ், எறிபந்து போட்டிகளில் வாயு அணியும், கூடைப்பந்து, செஸ் போட்டிகளில் அக்னி அணியும், கேரம், வாலிபால் போட்டிகளில் ஆகாஷ் அணியும் முதல் பரிசுகளை தட்டின.

ஆண்கள் பிரிவில் வாயு அணி, 320க்கு, 210 புள்ளிகளுடன் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்றது. அதேபோல், பெண்கள் பிரிவில், 300க்கு, 255 புள்ளிகளுடன் வாயு அணி, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் வென்றது.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us