ADDED : ஜன 07, 2024 11:15 PM
மேட்டுப்பாளையம்:காரமடை அருகே அத்திக்கடவு வனப்பகுதி உள்ளது. இங்கு தமிழக போலீசின் சிறப்பு இலக்குப் படை பிரிவின் சார்பில், மலைவாழ் மக்களுடன் வனப்பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
விழாவில், சிறப்பு இலக்குப் படை பிரிவின் துணை கண்காணிப்பாளர் சசிகுமார், இன்ஸ்பெக்டர் ஜான் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மலைவாழ் மக்களுக்கு புத்தாடைகள் வழங்கப்பட்டன.
'மலைவாழ் மக்கள் மாவோயிஸ்ட்களுக்கு உதவ கூடாது. குழந்தைகள் பள்ளி படிப்பை முடித்தவுடன் குழந்தை திருமணம் செய்து வைக்க கூடாது. மேற்படிப்பு படிக்க போலீசார் சார்பில் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும், என போலீசார் தெரிவித்தனர்.-