/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பல்கலை மானியக்குழுவின் என்.இ.பி., சாரதி மாணவர் துாதர் திட்டம்; 81 மாணவர்கள் தேர்வு பல்கலை மானியக்குழுவின் என்.இ.பி., சாரதி மாணவர் துாதர் திட்டம்; 81 மாணவர்கள் தேர்வு
பல்கலை மானியக்குழுவின் என்.இ.பி., சாரதி மாணவர் துாதர் திட்டம்; 81 மாணவர்கள் தேர்வு
பல்கலை மானியக்குழுவின் என்.இ.பி., சாரதி மாணவர் துாதர் திட்டம்; 81 மாணவர்கள் தேர்வு
பல்கலை மானியக்குழுவின் என்.இ.பி., சாரதி மாணவர் துாதர் திட்டம்; 81 மாணவர்கள் தேர்வு
ADDED : மே 18, 2025 12:12 AM
கோவை : பல்கலை மானியக்குழுவின் என்.இ.பி., சாரதி திட்டத்தில், தமிழகத்தை சேர்ந்த 81 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
உயர்கல்வியில் மாணவர்களின் பங்கேற்பை அதிகரிக்கவும், பல்வேறு சீர்திருத்தங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பல்கலை மானியக் குழு(யு.ஜி.சி.,), இந்தியாவில் உயர்கல்வியை மாற்றுவதில் கல்விச் சீர்திருத்தங்களுக்கான, 'என்.இ.பி., - சாரதி மாணவர் தூதர்' என்ற முயற்சியை கடந்தாண்டு துவங்கியது.
இத்திட்டத்தின் மூலம், தேசிய கல்விக் கொள்கை(என்.இ.பி.,) 2020ன் விதிகளை திறம்பட செயல்படுத்துவதில், மாணவர்கள் தீவிர பங்கேற்பாளர்களாக ஈடுபடுவதை, யு.ஜி.சி., நோக்கமாகக் கொண்டுள்ளது.
சிறந்த ஆளுமை, சிறந்த தகவல் தொடர்பு திறன், நிறுவன திறன்கள், படைப்பாற்றல், பொறுப்புணர்வு உள்ளிட்ட பல்வேறு திறன்களை கொண்ட மாணவர்களின் பட்டியலை பல்கலைகள், கல்லூரிகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களிடமிருந்து, பரிந்துரைகளை யு.ஜி.சி., கோரியிருந்தது.
இதன் அடிப்படையில், தற்போது என்.இ.பி., - சாரதி மாணவர் தூதர் பட்டியலை, யு.ஜி.சி., நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது. இதில், நாடு முழுவதிலும் உள்ள, 127 உயர்கல்வி நிறுவனங்களின், 771 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தின், ஏழு பல்கலைகள், ஐந்து கல்லுாரிகளின், 81 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் கோவையை சேர்ந்த ஒரு பல்கலை, நான்கு கல்லுாரிகளின், 33 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தேர்வு செய்யப்பட்டுள்ள மாணவர்கள், தேசிய கல்விக் கொள்கையின், முக்கியத்துவங்கள், பயன்கள் குறித்து கல்லுாரி மாணவர்களுக்கு, விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.