/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வருவாய் அலுவலர் சங்கத்தினர் பணி புறக்கணித்து போராட்டம் :வீட்டுக்கடன் பெற நீங்கள் தகுதியானவரா?வருவாய் அலுவலர் சங்கத்தினர் பணி புறக்கணித்து போராட்டம் :வீட்டுக்கடன் பெற நீங்கள் தகுதியானவரா?
வருவாய் அலுவலர் சங்கத்தினர் பணி புறக்கணித்து போராட்டம் :வீட்டுக்கடன் பெற நீங்கள் தகுதியானவரா?
வருவாய் அலுவலர் சங்கத்தினர் பணி புறக்கணித்து போராட்டம் :வீட்டுக்கடன் பெற நீங்கள் தகுதியானவரா?
வருவாய் அலுவலர் சங்கத்தினர் பணி புறக்கணித்து போராட்டம் :வீட்டுக்கடன் பெற நீங்கள் தகுதியானவரா?
ADDED : பிப் 23, 2024 10:41 PM

சூலுார்:சூலுார் தாலுகா அலுவலகத்தில், வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் பணிகளை புறக்கணித்து, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
'பட்டதாரி அல்லாத அலுவலர்களின் பணியிறக்க பாதுகாப்பு அரசாணையை உடனே வெளியிட வேண்டும்; மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர், தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
கடந்த, 13ம் தேதி தற்செயல் விடுப்பு எடுத்து, மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் இருந்தனர்.
நேற்று முதல் அனைத்து பணிகளையும் புறக்கணித்து, அலுவலக வாயிலில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சூலுார் தாலுகா அலுவலகத்தில், தாலுகா கிளை தலைவர் மகாராஜா தலைமையில் காத்திருப்பு போராட்டம் நடந்தது.
சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர். போராட்டத்தின் காரணமாக, அலுவலக பணிகள் முடங்கின.