/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கல்லூரி மாணவர்கள் இருவருக்கு கத்திக்குத்து கல்லூரி மாணவர்கள் இருவருக்கு கத்திக்குத்து
கல்லூரி மாணவர்கள் இருவருக்கு கத்திக்குத்து
கல்லூரி மாணவர்கள் இருவருக்கு கத்திக்குத்து
கல்லூரி மாணவர்கள் இருவருக்கு கத்திக்குத்து
ADDED : செப் 14, 2025 11:32 PM
போத்தனுார்; மலுமிச்சம்பட்டியை சேர்ந் தவர் குமரன், 21; தனியார் கல்லூரி மாணவர். தன்னுடன் பயிலும் கேரளாவை சேர்ந்த மாணவியை காதலிக்கிறார். அம்மாணவி, அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியுள்ளார். இரு நாட்களுக்கு முன், இருவரும் மாடியில் பேசிக்கொண்டிருந்தனர்.
இதை அதே குடியிருப்பில் தங்கியுள்ள, தனியார் நிறுவன ஊழியர் சதீஷ் கொம்பையா, 34 பார்த்தார். மறுநாள் மாணவி கல்லுாரிக்குச் சென்றபோது, சதீஷ் கொம்பையா கேலி செய்துள்ளார். இதை குமரனிடம் அம்மாணவி கூறினார். அன்றிரவு கல்லுாரி நண்பர் ஜெயவர்தனனுடன், அடுக்குமாடி குடியிருப்புக்கு குமரன் சென்றார்.
சதீஷ் கொம்பையாவிடம், காதலியை கேலி செய்தது குறித்து கேட்டிருக்கிறார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சதீஷ் கொம்பையா மற்றும் உடனிருந்த ஆறு பேர், கல்லுாரி மாணவர்கள் இருவரையும் தாக்கினர்.
அதில் ஒருவர், இருவரையும் கத்தியால் குத்தினார். அங்கிருந்தோர் இருவரையும் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். செட்டிபாளையம் போலீசார் வழக்கு பதிந்து, சதீஷ் கொம்பையா உள்ளிட்ட ஏழு பேரை தேடுகின்றனர்.