ADDED : ஜூன் 09, 2025 10:22 PM
அன்னுார்; அன்னுார் அருகே, 15 மொபைல் திருடிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
அன்னுார் பஸ் ஸ்டாண்டில், அடிக்கடி பொது மக்களிடம் மொபைல் திருட்டு போனது இதை அடுத்து போலீசார் கடந்த 6ம் தேதி வாகன சோதனை நடத்திய போது சந்தேகப்படும்படி இருவர் பிடிபட்டனர். அதில் ஒருவர் ஈரோடு மாவட்டம், புங்காரைச் சேர்ந்த சூரியகுமார், 21 மற்றொருவர் 17 வயது சிறுவன் என்பதும் தெரிய வந்தது. இவர்கள் இருவரும் அன்னுார், பிள்ளையப்பம்பாளையம், காரமடை, பெரியநாயக்கன்பாளையம், சிறுமுகை ஆகிய இடங்களில் 15 மொபைல் போன்களை திருடியது தெரிய வந்தது. அவர்களிடம் 15 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில், சூரியகுமார் அன்னுார் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறுவன் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பப்பட்டான்.