/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வீரமரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி வீரமரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி
வீரமரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி
வீரமரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி
வீரமரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி
ADDED : செப் 07, 2025 07:59 AM

கோவை: தமிழ்நாடு போலீஸ் தினமான செப்., 6ல் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அதில், பல்வேறு சம்பவங்களில் வீரமரணம் அடைந்த போலீசாருக்கு அஞ்சலி செலுத்தப்படுகிறது. கோவை மாநகர போலீசார் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ஆயுதப்படை மைதானத்தில் உள்ள நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
கோவை மாநகர போலீசாரின் குழந்தைகளுக்கான விளையாட்டு போட்டிகள், போலீஸ், பொதுமக்கள் நல்லுறவை மேம்படுத்தும் வகையில், கைப்பந்து போட்டிகள், மாலையில் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. காவலர் அருங்காட்சியகத்தில் பொதுமக்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற போலீசாரின் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில், மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார், டி.ஐ.ஜி., சசிமோகன், மாநகர போலீஸ் கமிஷனர்சரவணசுந்தர், எஸ்.பி., கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.