Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அணை உள்கரையில் சாயும் மரங்கள் மண் அரிப்பால் கவலை

அணை உள்கரையில் சாயும் மரங்கள் மண் அரிப்பால் கவலை

அணை உள்கரையில் சாயும் மரங்கள் மண் அரிப்பால் கவலை

அணை உள்கரையில் சாயும் மரங்கள் மண் அரிப்பால் கவலை

ADDED : மே 24, 2025 07:05 AM


Google News
Latest Tamil News
உடுமலை : திருமூர்த்தி அணை கரையில், வேரோடு சாய்ந்த மரங்களை அகற்றி விட்டு, மண் அரிப்பை தடுக்கும் வகையில், மரக்கன்றுகள் நட, ஆயக்கட்டு விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

உடுமலை அருகே, மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்தி அணை அமைந்துள்ளது. தொகுப்பு அணைகளில் இருந்து பெறப்படும் தண்ணீர் மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலையில் இருந்து வரும் பாலாறு வாயிலாக, அணைக்கு நீர்வரத்து கிடைக்கிறது.

மழைக்காலத்தில், மலைத்தொடரில் இருந்து வரும் தண்ணீரால், அணையின் உட்பக்க கரை அரிக்காமல் இருக்க, நுாற்றுக்கணக்கான மரங்கள் முன்பு நடவு செய்யப்பட்டன.

குறிப்பாக, அணை கட்டுமான பணிகளுக்குப்பிறகு, படகுத்துறையில் இருந்து குறிப்பிட்ட துாரத்துக்கு யூகலிப்டஸ் மரங்கள் நடப்பட்டுள்ளது. பல்வேறு காரணங்களால், தற்போது கரையிலுள்ள, யூகலிப்டஸ் மரங்கள் வேரோடு சாய்வது அதிகரித்துள்ளது.

இவ்வாறு விழுந்த மரங்கள் கரையில் இருந்து அகற்றப்படவில்லை. இதனால், பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுவருகிறது. மரங்கள் இல்லாத பகுதியில், மழைக்காலங்களில் தாழ்வான அணையை நோக்கி வெள்ள நீர் பாயும் போது அதிக மண் அரிப்பு ஏற்படுகிறது.

இதைத்தடுக்க தொலைநோக்கு திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. இதனால், விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.

ஆயக்கட்டு விவசாயிகள் கூறுகையில், 'திருமூர்த்தி அணையின் உள்கரையில் மண் அரிப்பை தடுக்க, புதிதாக மரக்கன்றுகள் நடுவது அவசியமாகும். கரைகளை பாதுகாக்கும் வகையிலான மரங்களை தேர்வு செய்து நடவு செய்ய வேண்டும். கரையில் பல இடங்களில் அடியோடு சாய்ந்து கிடக்கும் மரங்களை பொதுப்பணித்துறையினர் அகற்ற வேண்டும். மண் அரிப்பை தடுப்பது குறித்து, தொலைநோக்கு திட்டங்களை செயல்படுத்த நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம்,' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us