/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அவினாசிலிங்கம் பள்ளியில் மரக்கன்று நட்டு விழிப்புணர்வு அவினாசிலிங்கம் பள்ளியில் மரக்கன்று நட்டு விழிப்புணர்வு
அவினாசிலிங்கம் பள்ளியில் மரக்கன்று நட்டு விழிப்புணர்வு
அவினாசிலிங்கம் பள்ளியில் மரக்கன்று நட்டு விழிப்புணர்வு
அவினாசிலிங்கம் பள்ளியில் மரக்கன்று நட்டு விழிப்புணர்வு
ADDED : ஜூன் 07, 2025 01:24 AM

கோவை; அவினாசிலிங்கம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்றுகள் நட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நாட்டு நலப்பணி திட்ட மாணவியர் மற்றும் பசுமை படை மன்ற மாணவியர் இணைந்து, வேம்பு, நெல்லி உட்பட, 45 மரக்கன்றுகளை பள்ளி வளாகத்தில் நடவு செய்தனர். பள்ளி தலைமையாசிரியை நளினி, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் மோகனாம்பாள் ஆகியோர் மரக்கன்றுகள் நடவு செய்து, மாணவியரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.