/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி
ADDED : ஜூலை 02, 2025 09:51 PM
நெகமம்; நெகமம் அருகே, மெட்டுவாவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான பயிற்சி நடந்தது.
கிணத்துக்கடவு ஒன்றியத்தில் உள்ள, 73 பள்ளிகளில் சிறந்த எஸ்.எம்.சி., பள்ளியாக கிணத்துக்கடவு அரசு துவக்கப்பள்ளி மற்றும் மெட்டுவாவி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தேர்வாகியுள்ளது.
இந்நிலையில், மெட்டுவாவி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான சிறப்பு பயிற்சி நேற்று நடந்தது.
இதில், எஸ்.எம்.சி., தலைவர் திவ்யா தலைமை வகித்தார். தலைமையாசிரியர் மயிலாத்தாள் வரவேற்றார். பள்ளி மேலாண்மை குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராஜா பயிற்சியளித்தார்.
இதில், பயிற்சியின் சிறப்பம்சங்கள், பள்ளி மேலாண்மை குழு பயன்கள், உறுப்பினர்களின் பணிகள், பள்ளியின் அடிப்படைத் தேவைகளை பட்டியலிட்டு எப்படி பூர்த்தி செய்ய வேண்டும், யாரை அணுக வேண்டும் என்பது குறித்து பேசினார். நிகழ்ச்சியில், எஸ்.எம்.சி., உறுப்பினர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.