/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ரயில் பயணியின் நகை மீட்பு; தவற விட்டவருக்கு அழைப்பு ரயில் பயணியின் நகை மீட்பு; தவற விட்டவருக்கு அழைப்பு
ரயில் பயணியின் நகை மீட்பு; தவற விட்டவருக்கு அழைப்பு
ரயில் பயணியின் நகை மீட்பு; தவற விட்டவருக்கு அழைப்பு
ரயில் பயணியின் நகை மீட்பு; தவற விட்டவருக்கு அழைப்பு
ADDED : மே 27, 2025 08:29 PM
கோவை : ரயில் பயணிகள் தவறவிட்ட, ஏழு சவரன் தங்க நகைகளை, ரயில்வே போலீசார் மீட்டனர். தவறவிட்டவர்கள் உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, பெற்றுக்கொள்ளலாம் என போலீசார் தெரிவித்தனர்.
நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில், ரயில்வே போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, முன்பதிவில்லாத பயணிகள் பெட்டியில், இரண்டு பேக்குகள் கேட்பாரற்று கிடந்தன. பேக்கில், ஆறு சவரன் தங்க நகைகள் இருந்தன. 2வது பிளாட்பாரத்தில் கிடந்த, ஒரு பவுன் பிரேஸ்லெட்டையும் போலீசார் மீட்டனர்.
நகைகள் மீட்கப்பட்டது தொடர்பாக, போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நகைகளை தவறவிட்டவர்கள் அதற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து, பெற்றுக்கொள்ளலாம் என போலீசார் தெரிவித்தனர்.