/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கவியருவியில் சுற்றுலா பயணியருக்கு தடை கவியருவியில் சுற்றுலா பயணியருக்கு தடை
கவியருவியில் சுற்றுலா பயணியருக்கு தடை
கவியருவியில் சுற்றுலா பயணியருக்கு தடை
கவியருவியில் சுற்றுலா பயணியருக்கு தடை
ADDED : ஜூன் 20, 2025 02:41 AM

பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே, கவியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி மற்றும் வால்பாறை பகுதிகளில் தொடர் கனமழை பெய்வதால், அணைகளின் நீர்மட்டம் வேகமாக நிரம்பி வருகின்றன.அதில், ஆனைமலை புலிகள் காப்பகம் ஆழியாறு கவியருவிக்கு நீர் வரத்து அதிகரித்து ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால், சுற்றுலா பயணியர் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது.
தொடர் நீர் வரத்து காரணமாக பாதுகாப்பு கருதி வனத்துறையினர் தடுப்பு அமைத்து உள்ளனர். வால்பாறை செல்லும் சுற்றுலா பயணியர், கவியருவி முன் வாகனத்தை நிறுத்தி அருவியை கண்டு ரசித்து செல்கின்றனர்.
மழைப்பொழிவு குறைந்து, சேதமடைந்த இரும்பு தடுப்புகள் சரி செய்த பின் சுற்றுலா பயணியருக்கு அனுமதி அளிக்கப்படும், என, வனத்துறையினர் தெரிவித்தனர்.