ADDED : பிப் 24, 2024 01:19 AM
காரமடை அரங்கநாதர் கோவில், தேர் திருவிழாவில், முக்கிய விழாவாக நடைபெறும், தீ பந்த சேவையில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பர்.
காரமடை அரங்கநாதர் கோவில், மாசி மகத்தேர்த்திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தேரோட்டம், தண்ணீர் மற்றும் தீப்பந்த சேவை முக்கிய விழாவாகும். தேரோட்டத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மற்றும் பாலக்காடு ஆகிய பகுதியைச் சேர்ந்த பக்தர்கள், பல்லாயிரக்கணக்கான மேற்பட்டவர்கள் பங்கேற்பர்.
தேரோட்டத்திற்கு அடுத்த நாள், தண்ணீர் மற்றும் தீ பந்த சேவை நேர்த்திக்கடன் செலுத்தும் விழா நடைபெறும்.
இதில் கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த, ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் தீப்பந்தங்களை எடுத்து, நான்கு ரத வீதிகள் வழியாக ஆடி வந்து சுவாமி முன், நேர்த்திக்கடன் செலுத்துவர். கோவில் ஸ்தலத்தாரிடம் முத்திரை குத்திய நபர்கள் மட்டுமே, தீப்பந்தத்தை எடுத்து ஆடி வருவர். தீப்பந்த சேவை, தேர்த்திருவிழாவின் முக்கிய விழா ஆகும்.