/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

தமிழ் பேச்சுப்போட்டி
ஸ்ரீ சங்கரா தொலைக்காட்சி, 'தமிழ்த்திருவிழா' என்ற தலைப்பில் பிரம்மாண்ட தமிழ் பேச்சு போட்டியை நடத்துகிறது. இதன் இறுதிச்சுற்று, நவஇந்தியா இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில், மாலை, 6:00 மணி முதல் நடக்கிறது. தமிழ் அறிஞர்கள் சிவகாசி ராமச்சந்திரன், பர்வீன் சுல்தானா, கவிஞர் மதுரை ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
சங்கமம் திருவிழா
கலை பண்பாட்டுத்துறை சார்பில், 'கோவை சங்கமம்' கலைத் திருவிழா நடக்கிறது. நையாண்டி மேளம், தோடர் நடனம், துடும்பாட்டம், பரதநாட்டியம், சிலம்பாட்டம், வள்ளிகும்மி உட்பட 20 கலைக்குழுக்களின், கலைநிகழ்ச்சிகள் நடக்கின்றன. வ.உ.சி., மைதானத்தில், மாலை, 6:00 முதல் 9:00 மணி வரை நிகழ்ச்சி நடக்கிறது.
குண்டம் திருவிழா
இடையர்பாளையம், வெள்ளலுார், கொண்டத்து மாகாளியம்மன் கோவிலில், குண்டம் திருவிழா நடக்கிறது. கடந்த ஜன.,30ம் தேதி முதல் சாமி சாட்டுதல், அக்னி சாட்டு, 108 திருவிளக்கு வழிபாடு ஆகியவை நடந்தது. இன்று, மதியம், 12:00 முதல் மாலை, 5:00 மணி வரை, தீர்த்த காவடிகள் பூஜை நடக்கிறது.
நகைச்சுவை சிறப்புரை
அம்பாள் ஆட்டோ மற்றும் கோவை நகைச்சுவை சங்கம் இணைந்து, நகைச்சுவை சிறப்புரை நிகழ்ச்சியை நடத்துகின்றன. ஆர்.எஸ்.புரம், கிக்கானி மேல்நிலைப்பள்ளியின் சரோஜினி கலையரங்கத்தில், மாலை, 6:00 மணிக்கு நிகழ்ச்சி நடக்கிறது. இதில், கவிஞர் மோகனசுந்தரம் சிறப்புரையாற்றுகிறார். அனைவரும் கலந்துகொள்ளலாம், அனுமதி இலவசம்.
வீட்டுக்கடன் கண்காட்சி
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, வி.ஜி., விளம்பர நிறுவனம் சார்பில், வீட்டுக் கடன் கண்காட்சி நடக்கிறது. கவுண்டம்பாளையம், கல்பனா திருமண மண்டபத்தில், காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை கண்காட்சி நடக்கிறது. முன்னணி பில்டர்கள் தங்கள் அரங்கங்களை அமைத்துள்ளனர்.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
கோவை அரசு கலைக்கல்லுாரி புவியியல்துறை முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, காலை, 9:30 மணிக்கு, கல்லுாரி வளாகத்தில் நடக்கிறது. கல்லுாரியில், 1946ல் இத்துறை துவக்கப்பட்டது முதல் படித்த முன்னாள் மாணவர்கள், பேராசிரியர்கள், சாதனையாளர்கள் இந்நிகழ்வில் கவுரவிக்கப்படுகின்றனர். மாலை, 5:00 மணி வரை நடக்கும் நிகழ்வில், கலந்துரையாடல் மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகள் நடக்கின்றன.
நுால் அறிமுக விழா
தமிழ்நாடு இலக்கியப் பெருமன்றம் கோவை மேற்குக் கிளை மற்றும் சங்கமம் அமைப்பு சார்பில், நுால் அறிமுக விழா நடக்கிறது. வெங்கிட்டாபுரம், விநாயகர் கோவில் திடலில், மாலை, 6:00 மணிக்கு விழா நடக்கிறது. இதில், பொள்ளாச்சி அபி எழுதிய, 'பாட்டையா' என்ற நுால் அறிமுகம் செய்யப்படுகிறது. நான்சி மோகன், 50 நாள் -50 புத்தகங்களைஅறிமுகம் செய்தமைக்கு பாராட்டு விழாவும் நடக்கிறது.
ஆண்டு விழா
கோயம்புத்துார் கல்சுரல் அகாடமியின், 22வது ஆண்டுவிழா, நவஇந்தியா, எஸ்.என்.ஆர்., கலையரங்கத்தில் நடக்கிறது. பாடகரும், இசையமைப்பாளருமான டி.இமான் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்கிறார். இதில், எஸ்.பி. பாலசுப்பிரமணியம் பாடல்களை பாடி உலக சாதனையையும் மாணவர்கள் நிகழ்த்துகின்றனர்.
கேலக்சி உணவகம் திறப்பு
ரோட்டரி கிளப் ஆப் கோயமுத்துார் கேலக்சி சார்பில், கேலக்சி உணவகத்தின் திறப்பு விழா நடக்கிறது. ஜி.என்.ரெசிடன்சி அருகே, காலை, 8:30 மணிக்கு நிகழ்வு நடக்கிறது. மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக, இந்த உணவகம் அமைத்து கொடுக்கப்படுகிறது.
உயர்ந்த பக்தி எது?
அபங்க சங்கீர்த்தனம் ஹரிகதை, உயர்ந்த பக்தி எது? என்ற தலைப்பில் நடக்கிறது. ஸ்ரீ ரகுநாத்தாஸ் மஹராஜ் சொற்பொழிவாற்றுகிறார். ராம்நகர், சத்தியமூர்த்த்தி ரோடு, ஸ்ரீ ராமலட்சுமி ஹாலில், மாலை, 6:30 மணிக்கு நடக்கிறது. அனைவரும் கலந்து கொள்ளலாம்.
அமைதியின் அனுபவம்
தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாதுரைசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங்கம் நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.