/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்
மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

ஞான வேள்வி
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில், ஞான வேள்வி எனும் ஆன்மிக சொற்பொழிவு நடக்கிறது. இதில், 'ஓங்காரப்பொருள்' அக் ஷரமண மாலை என்ற தலைப்பில், ஆன்மிக பேச்சாளர் கிருஷ்ணா உரையாற்றுகிறார். ராம்நகர், ராமர் கோவிலில், மாலை, 6:30 மணிக்கு சொற்பொழிவு நடக்கிறது. முன்னதாக, மாலை, 6:00 மணிக்கு, ரமணர் பாடல்கள், சத்சங்கம் நடக்கிறது.
தைப்பூச திருவிழா
மருதமலை, முருகன் கோவிலில், தைப்பூச திருவிழா நிறைவையொட்டி, வசந்த உற்சவம் நடக்கிறது. காலை, 7:00 மணி முதல், சுத்த புண்யாஹம், ஸ்நபனம், ஹவனம், அபிஷேக பூஜை மற்றும் தீபாராதனை நடக்கிறது. மாலை, 4:30 முதல் 7:30 மணி வரை, அபிஷேக பூஜை, தீபாராதனை நடக்கிறது.
பாலாலய பூஜை
மகாலட்சுமியை பூஜித்தால் செல்வ வளம் மட்டுமின்றி, வாழ்க்கையில் மகிழ்ச்சியும் பெருகும். குனியமுத்துார், இடையர்பாளையம், மகாலட்சுமி அம்மன் கோவிலில், பாலாலய பூஜை, மாலை, 5:00 முதல் இரவு, 8:00 மணி வரை நடக்கிறது.
போட்டோ டுடே
போட்டோ, வீடியோ, டிஜிட்டல் பிரேமிங் மற்றும் ஆல்பம் தொழில் குறித்த கண்காட்சி, அவிநாசி ரோடு, கொடிசியா வளர்த்தக வளாகத்தில் நடக்கிறது. இன்று, பேபி சூட், டி.ஜே., ஆடியோ புரோகிராம் குறித்து வல்லுனர்கள் பேசுகின்றனர். இலவச போட்டோகிராபி ஷோ மற்றும்பயிலரங்கு நடக்கிறது. கண் பரிசோதனை மற்றும் கேமரா சர்வீசும் உண்டு.
திருக்குறள் முத்தமிழ் விழா
உலக தமிழ் நெறிக்கழகம், திருக்குறள் உலகம் கல்விச்சாலை சார்பில், திருக்குறள் முத்தமிழ் விழா நடக்கிறது. இதில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, திருக்குறள் முத்தமிழ் போட்டி நடக்கிறது. தேவாங்கபேட்டை வீதி, சுவாமி விவேகானந்தர் இல்லத்தில், காலை, 9:30 மணி முதல் விழா நடக்கிறது.
நகை கண்காட்சி
சென்னை யுனைடெட் எக்ஸ்பிஷன், மாபெரும் நகை கண்காட்சி, அவிநாசி ரோடு, தி ரெசிடன்சி டவர்சில் நடக்கிறது. சென்னை, மும்பை, ஐதராபாத் போன்ற பெரு நகரங்களை சேர்ந்த ஜூவல்லரி நிறுவனங்கள் ஸ்டால்கள் அமைத்துள்ளன. இன்றுடன் நிறைவுபெறும் கண்காட்சியை, காலை, 10:00 முதல், இரவு, 8:00 மணி வரை காணலாம்.
கைவினை கண்காட்சி
கலைநயமிக்க கைவினை பொருட்கள் மீது தீரா காதல் கொண்டபவரா நீங்கள். அப்ப, உங்களுக்கான கண்காட்சிதான் இது. அவிநாசி ரோடு, மீனாட்சி ஹாலில், பலவிதமான கைவினைபொருட்களின்கண்காட்சி நடக்கிறது. காலை, 10:30 முதல், இரவு, 8:00 மணி வரை நடக்கும் கண்காட்சியை பார்வையிட,அனுமதி இலவசம்.
மினி மராத்தான்
மணியகாரன்பாளையம், சி.எம்.எஸ்., வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி சார்பில், மினி மராத்தான் போட்டி நடக்கிறது. போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் குழந்தைகள் வன்கொடுமை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடக்கும் மராத்தான் போட்டிக்கு, முன்னாள் தமிழக டி.ஜி.பி., சைலேந்திர பாபு தலைமை வகிக்கிறார். பள்ளி வளாகத்தில், காலை, 5:30 மணிக்கு மராத்தான் போட்டி நடக்கிறது.
அமைதியின் அனுபவம்
தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங்கம் நடக்கிறது.
இலவச மருத்துவ முகாம்
அரிமா சங்கம் சார்பில், சி.எம்.எஸ்., மெட்ரிக் பள்ளி மற்றும் கே.ஜி., மருத்துவமனை இணைந்து, மாபெரும் இலவச மருத்துவ முகாம் நடக்கிறது. கணபதி, சி.எம்.எஸ்., மெட்ரிக் பள்ளியில், காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை மருத்துவ முகாம் மற்றும் மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கம் நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம்
தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது.