Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

ADDED : ஜூன் 21, 2025 12:24 AM


Google News

ஜென்ம தின வைபவம்


ராம்நகர், அய்யப்பன் பூஜா சங்கத்தில், ஸ்ரீ ஸ்வயம் பிரகாச சச்சிதானந்த சரஸ்வதி மகா சுவாமிகளின் ஜென்ம தின வைபவம் நடக்கிறது. காலை, 8:30 முதல், ஸ்ரீ தேவி, பூதேவி, ஸ்ரீனிவாச பெருமாள் விசேஷ திருமஞ்சனம் சங்கல்ப சேவை, அகண்ட நாம சங்கீர்த்தனம், மாப்பிள்ளை அழைப்பு நடக்கிறது. மாலை, 3:00 மணி முதல், திருக்கல்யாண உற்சவம், சுவாமிகள் நகர்வலம், சக்ர நவாவர்ண பூஜை நடக்கிறது.

கீதையில் கண்ணன்


ராம்நகர், ஸ்ரீ கோதண்டராமசுவாமி தேவஸ்தானத்தில், உபன்யாசம் மற்றும் வில்லி பாரதம் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இன்று, மாலை, 6:30 முதல் இரவு, 8:30 மணி வரை, 'கீதையில் கண்ணன்' என்ற தலைப்பில், சொற்பொழிவு நடக்கிறது. திருச்சி கல்யாணராமன் உரையாற்றுகிறார்.

பூச்சாட்டு திருவிழா


கவுண்டம்பாளையம், மாரியம்மன், மாகாளியம்மன் கோவிலில், பெரும் பூச்சாட்டு திருவிழா கடந்த 16ம் தேதி முதல் நடந்து வருகிறது. இரவு, 7:00 மணிக்கு கோவில் வளாகத்தில் மனம் மயக்கும் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

நதியின் பிழையன்று


'நதியின் பிழையன்று' எனும் நொய்யல் பற்றிய வரலாற்று நவீனம் நுால் வெளியீட்டு விழா, அவிநாசி ரோடு, இந்திய வர்த்தகசபை அரங்கத்தில் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு நடக்கும் நிகழ்வில், சிறு துளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் நுாலை வெளியிடுகிறார்.

மனம் என்னும் மந்திரச்சாவி


பி.எஸ்.ஜி., அறநிலையம் சார்பில், சிறப்புச் சொற்பொழிவு பீளமேடு, பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி வளாகத்தில், மாலை, 6:00 மணிக்கு நடக்கிறது.'மனம் என்னும் மந்திரச்சாவி' என்ற தலைப்பில், தமிழருவி மணியன் உரையாற்றுகிறார். முன்னதாக, மாலை, 5:30 மணிக்கு, பி.எஸ்.ஜி., கலை கல்லுாரி மாணவர்களின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

கோவை நாடக விழா


ஸ்ரீ மாருதி கான சபா சார்பில், கோவை நாடக விழா, மாலை, 5:30 மணிக்கு நடக்கிறது. நிகழ்வில், நடிகர் காத்தாடி ராமமூர்த்தி சிறப்புரையாற்றுகிறார். மூத்த நாடக கலைஞர் அனந்த சுப்ரமணியனுக்கு பாராட்டு விழா நடக்கிறது.

இலக்கியச் சந்திப்பு


தமிழ்நாடு இலக்கியப் பேரவை சார்பில், 383வது இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி ராமநாதபுரம், ராமசாமி வீதி, பொதுசன சங்கம் நடராச வாசகசாலை அறக்கட்டளையில், காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. பல்வேறு தலைப்புகளில் எழுத்தாளர்கள், கவிஞர்கள் சிறப்புரையாற்றுகின்றனர்.

உணவும் மரபியலும்


பாரதீய வித்யா பவன் சார்பில், 184வது சிந்தனை அரங்க சிறப்புரை நிகழ்ச்சி, ஆர்.எஸ்.புரம், பவன் வளாகத்தில், மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது. அஸ்வின் மூலிகைகள் மற்றும் உணவுகள் நிறுவனர் மதன் சங்கர், 'உணவும், மரபியல் கூறுகளும்' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றுகிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us