Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

ADDED : ஜூன் 01, 2025 01:33 AM


Google News

கும்பாபிஷேக விழா


காட்டூர், காளப்பன் லேஅவுட், பண்ணாரி மாரியம்மன் கோவிலில், மகா கும்பாபிஷேக விழா நடக்கிறது. காலை, 7:00 மணி முதல், இரண்டாம் கால ஹோமங்கள் நடைபெறும். தொடர்ந்து, காலை, 8:24 மணிக்குமேல், மகா கும்பாபிஷேகம், மகா அபிஷேகம், அலங்காரம், கோபூஜை நடைபெறும்.

பகவத்கீதை சொற்பொழிவு


உங்கள் எண்ணங்களால் ஒன்றை உருவாக்கவும், அழிக்கவும் முடியும் என போதிக்கும் பகவத்கீதை மனமே வலிமையானது என்கிறது. டாடாபாத், ஆர்ஷா அவிநாஷ் பவுண்டேஷனில், பகவத்கீதை சொற்பொழிவு, மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது.

அபிஷேக விழா


கோவை நகரத்தார் இளைஞர் சங்கம் சார்பில், பேரூர் பட்டீஸ்வரர் கோவில், பாலதண்டாயுதபாணி சன்னதியில், காலை, 9:30 மணிக்கு அபிஷேக விழா நடக்கிறது.

* ஆர்.எஸ்.புரம், காமாட்சி அம்பாள் கோவிலில், சஷ்டி அபிஷேகம் மாலை, 6:00 மணிக்கு நடக்கிறது.

கண் இலவச பரிசோதனை


புனித கார்மெல் அன்னை ஆலயம் மற்றும் அனைத்து சமூக மக்களுக்கு உதவும் பேரவை சார்பில், கண் இலவச பரிசோதனை முகாம் நடக்கிறது. அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் முகாம், மவுண்ட் கார்மெல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், காலை, 8:30 முதல் மதியம், 2:00 மணி வரை நடக்கிறது.

ஆன்மிக சொற்பொழிவு


மலுமிச்சம்பட்டி, ஆத்ம வித்யாலயம் அத்வைத வேதாந்த குருகுலத்தில், வாக்கிய விருத்தி வகுப்பு காலை, 9:30 மணி முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கிறது. சுவாமி சங்கரானந்த, வாக்கிய விருத்தி வகுப்பை வழங்குகிறார்.

ராதா கல்யாண மகோற்சவம்


ஸ்ரீ ராதே கிருஷ்ணா சேவா கமிட்டி மற்றும் தமிழ்நாடு பிராமணர் சங்கம் சார்பில், ராதா கல்யாண மகோற்சவம் நடக்கிறது. துடியலுார், மேட்டுப்பாளையம் ரோடு, எஸ்.எஸ்.கமலேஷ் திருமண மண்டபத்தில், காலை, 8:00 மணிக்கு உஞ்சவ்ருத்தி நடக்கிறது. தொடர்ந்து, காலை, 10:00 மணிக்கு, ராதா கல்யாண மகோற்சவம் நடக்கிறது. மதியம், 1:00 மணிக்கு ஆஞ்சநேயர் உற்சவம் நடக்கிறது.

தொழில்நுட்ப கருத்தரங்கு


ரத்தினம் தொழில்நுட்ப வளாகத்தில், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறையின் சார்பில், 'சிக்னல்ஸ் அண்ட் சிஸ்டம்ஸ்' என்ற தலைப்பில், இரண்டாம் ஆண்டு மாணவர்களுக்கு கருத்தரங்கு நடக்கிறது.

ஓவியக்கண்காட்சி


கஸ்துாரி சீனிவாசன் அறநிலையம் 2025ம் ஆண்டு ஓவியக் கண்காட்சிகளை, 'ரிதமிக் பேலட்' தொடர் என்ற தலைப்பில் நடத்தி வருகிறது. இத்தொடரின், 15வது ஓவியக்கண்காட்சி அவிநாசி ரோடு, கஸ்துாரி சீனிவாசன் கலைமையத்தில் நடந்து வருகிறது. காலை, 10:00 முதல் மாலை, 6:30 மணி வரை பார்வையிடலாம்.

சமஸ்கிருத வகுப்புகள்


ராம்நகர், ஸ்ரீ கோதண்டராமசுவாமி தேவஸ்தானம் மற்றும் சமஸ்கிருத வித்யாஸ்ரீ இணைந்து, சமஸ்கிருத வகுப்புகளை நடத்துகின்றன. காலை, 10:15 முதல் மதியம், 1:15 மணி வரை, சமஸ்கிருத மொழி, பகவத்கீதை, ஸ்லோகங்கள் கற்பித்து தரப்படுகிறது.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்


ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.,நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us