/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நகை கண்காட்சி காண இன்று கடைசி நாள்நகை கண்காட்சி காண இன்று கடைசி நாள்
நகை கண்காட்சி காண இன்று கடைசி நாள்
நகை கண்காட்சி காண இன்று கடைசி நாள்
நகை கண்காட்சி காண இன்று கடைசி நாள்
ADDED : ஜன 27, 2024 11:30 PM
கோவை:சென்னை யுனைடெட் எக்சிபிஷன் சார்பில், 'தி ஜூவல்லரி எக்ஸ்போ' என்ற நகை கண்காட்சி, கோவை, அவினாசி ரோட்டிலுள்ள, தி ரெசிடென்சி ஓட்டலில் நேற்று முன்தினம் துவங்கியது. இன்று நிறைவடைகிறது.
கண்காட்சியில், மும்பை, ைஹதராபாத், சென்னை, பெங்களூரு, கோவை, திண்டுக்கல், கரூர், ஈரோடு உட்பட பெரிய நகரங்களிலுள்ள, ஜூவல்லரி நிறுவன ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. தங்கம், வைரம், வெள்ளி, முத்து, குந்தன், மீனாகரி, போல்கி, ஜடவ், ரூபி, எமரால்டு உள்ளிட்ட பல்வேறு நகை மாடல்கள் வைக்கப்பட்டுள்ளன. 60க்கும் மேற்பட்ட ஸ்டால்களில், ஒரு லட்சம் நகை டிசைன்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.
தினசரி காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை நடைபெறும் இக்கண்காட்சியை, காண அனுமதி இலவசம்.