/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/குடிநீரை சுவைத்து குடிக்கணும்: தினம் இரு வேளை குளிக்கணும்!குடிநீரை சுவைத்து குடிக்கணும்: தினம் இரு வேளை குளிக்கணும்!
குடிநீரை சுவைத்து குடிக்கணும்: தினம் இரு வேளை குளிக்கணும்!
குடிநீரை சுவைத்து குடிக்கணும்: தினம் இரு வேளை குளிக்கணும்!
குடிநீரை சுவைத்து குடிக்கணும்: தினம் இரு வேளை குளிக்கணும்!
ADDED : பிப் 24, 2024 08:55 PM
வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் உடல் உபாதைகளை தவிர்க்க, அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் இ.எஸ்.ஐ., மருத்துவமனை உதவி மருத்துவ அலுவலர்(ஆயுர்வேதம்) பாபு அளித்த 'டிப்ஸ்' இதோ!
n கோடை காலத்தில் காலையில் பல் துலக்கியவுடன் ஒரு டம்ளர் தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும். டீக்கு பதிலாக மல்லி டீ, சுக்கு காபி குடிக்கலாம்.
n காலையில் ஆவியில் வேகவைத்த உணவு எடுத்துக் கொள்ளலாம். காலை உணவுக்குப் பின் பகல், 12:00 மணிக்கு முன் மாதுளை, தர்ப்பூசணி, திராட்சை, கொய்யா, பப்பாளி இவற்றில் ஏதேனும் ஒன்றோ அல்லது கலந்தோ எடுத்துக் கொள்வது நல்லது.
n மாலை சூரிய அஸ்தமனத்துக்கு முன் இளநீர், மோர், ஏதாவது ஒன்றை எடுத்துக் கொள்ளலாம். பழங்களை இரவில் எடுத்துக் கொள்ளக்கூடாது.
n உடலில் உள்ள சூடு குறைய, எண்ணெய் குளியல் அவசியம். வயிற்றில் அஜீரணம் இருக்கக்கூடாது.
n நீர் என்பதும் உணவுப் பொருள் தான். அதையும் வாயில் வைத்து சுவைத்து குடிக்க வேண்டும். முக்கியமாக காலை 5:00 முதல் 7:00 வரை பெருங்குடல் வேலை செய்வதற்கான முக்கிய நேரம். அந்த சமயத்தில் நாம் குடிக்கும் தண்ணீர் தான், நமது குடல்களைச் சுத்தப்படுத்தி பசி உணர்வைத் தூண்டும். நல்ல ஜீரணத்துக்கு உதவி செய்யும். இதனால் மலச்சிக்கல் நீங்குவதோடு உடல் உஷ்ணமும் கட்டுக்குள் இருக்கும்.
n கோடை காலத்தில் மதிய உணவுக்கு, 30 நிமிடங்களுக்கு முன் சிறிது தண்ணீர் குடித்துக் கொள்ளுங்கள். சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது இடையில் தண்ணீர் குடிப்பது தவிர்க்கப்படும். இது உணவு ஜீரணத்தை துரிதப்படுத்தும். மதிய உணவில் நீர்க் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளலாம். இந்த காலத்தில், மோர் தாராளமாகக் குடிக்கலாம். வாரத்தில் நான்கு நாட்களாவது மதிய உணவோடு சேர்த்து மோரை சாப்பிடலாம்.
n அசைவ உணவு சாப்பிடுபவர்கள், இறைச்சியின் வெப்பம் குறையும் முன்னரே சமைத்து விட வேண்டும். அசைவ உணவை மதிய வேளைகளில் சாப்பிடுங்கள். இரவில் சாப்பிடுவதாக இருந்தால், இரவு 8:00 மணிக்கு முன் சாப்பிட வேண்டும். அதிக மசாலாவும், காரமும் இல்லாமல் சாப்பிடுங்கள்.
n கோடை காலத்தில் இருவேளை குளிக்க வேண்டும். கோடை காலத்தில் பருத்தி ஆடைகளை அணிவது நல்லது.