Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குரூப் 1 தேர்வில் ஜெயிக்க... வென்றவர் சொல்கிறார் 'டிப்ஸ்'

குரூப் 1 தேர்வில் ஜெயிக்க... வென்றவர் சொல்கிறார் 'டிப்ஸ்'

குரூப் 1 தேர்வில் ஜெயிக்க... வென்றவர் சொல்கிறார் 'டிப்ஸ்'

குரூப் 1 தேர்வில் ஜெயிக்க... வென்றவர் சொல்கிறார் 'டிப்ஸ்'

ADDED : செப் 13, 2025 11:09 PM


Google News
''தி னந்தோறும் நாளிதழ்களை படித்தாலே, குரூப் 1 தேர்வில் எளிதாக ஜெயித்து விடலாம்,'' என்கிறார், இத்தேர்வில் வெற்றி பெற்று, தற்போது பணியில் உள்ள லாரன்ஸ்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தமிழக அரசுப் பணிகளுக்கான குரூப் 1, குரூப் 2, குரூப் 4 போன்ற தேர்வுகளை நடத்துகிறது.

எல்லோரும் கடினமான தேர்வாக நினைக்கிறார்கள். ஆனால், எளிதாக ஜெயித்து விடலாம்'' என்று நம்பிக்கை ஊட்டுகிறார், அரசு பணியாளர் லாரன்ஸ்.

எப்படி என விளக்குகிறார் அவர் n குரூப் 1 தேர்வில், முதலில் முதனிலை தேர்வில் தமிழ் மற்றும் பொது அறிவியல் கேள்விகள் கேட்கப்படும்.

n இரண்டாவதாக பிரதான தேர்வில், தமிழ் அல்லது ஆங்கிலப் பாடம் மற்றும் தேர்வு செய்யும் பாடங்களில் தேர்வு வைக்கப்படும். இதில், கொள்குறி வகை மற்றும் விரிவான விடையளித்தல் என, இரு வகைகளில் விடையளிக்க வேண்டும்.

n பிரதான தேர்வுக்கு தேர்ச்சி பெற்றவர்களிடம் ஆலோசித்து, பாடங்களை தேர்வு செய்ய வேண்டும்.

n மூன்றாவதாக நேர்காணல். இது மிகவும் முக்கியமான கட்டம். பொது அறிவு, நடப்பு நிகழ்வுகளில் மிகவும் முக்கியம் வாய்ந்த செய்திகள், நடப்பு நிகழ்வுகள் குறிந்து தெரிந்திருக்க வேண்டும்.

n உலக செய்திகள், இந்திய செய்திகள், மாநில அளவிலான செய்திகள், குறிப்பாக, கொள்கை முடிவுகள், ஒப்பந்தங்கள், பொருளாதார முக்கியத்துவம் வாய்ப்பு செய்திகள் அறிந்து வைத்திருக்க வேண்டும். தினமும் நாளிதழ் வாசித்தாலே, இதுபோன்ற செய்திகளை அறிந்து கொள்ளலாம். நாளிதழ் வாசிப்பு மிகவும் முக்கியம்.

n தினமும் முந்தைய ஆண்டு கேள்வித்தாளை, வீட்டிலேயே தேர்வு போல எழுதி, சுய மதிப்பீடு செய்வதன் வாயிலாக, தேர்வு தொடர்பான நேர மேலாண்மை, சுருக்க முறையில் கணக்கிடுதல் போன்றவற்றால், தேர்வு நேரத்தில் ஏற்படும் பதற்றத்தை குறைக்க முடியும்.

இவை

முக்கியம்

''தேர்வில் வெற்றி பெற மொபைல் போனில் மூழ்கிக் கிடப்பது, திரைப்படம் பார்ப்பது போன்ற, நேர விரயம் ஏற்படுத்தும் விஷயங்களை, அறவே தவிர்க்க வேண்டும். ஆரோக்கியமான உணவு, போதிய ஓய்வு, சரியான அளவிலான உறக்கம், எதையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் இருக்க வேண்டும்,'' என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us