/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வாழையில் காய் வெடிப்பு தடுப்பதற்கு ஆலோசனை வாழையில் காய் வெடிப்பு தடுப்பதற்கு ஆலோசனை
வாழையில் காய் வெடிப்பு தடுப்பதற்கு ஆலோசனை
வாழையில் காய் வெடிப்பு தடுப்பதற்கு ஆலோசனை
வாழையில் காய் வெடிப்பு தடுப்பதற்கு ஆலோசனை
ADDED : செப் 04, 2025 10:46 PM
பொள்ளாச்சி; பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் தென்னையில் ஊடுபயிராகவும், தனிப்பயிராகவும், நேந்திரன், செவ்வாழை, சாம்பிராணி, பூவன், கதளி வகை வாழை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வாழையில், ஏற்படும் காய் வெடிப்புக்கு, திருச்சி, தேசிய வாழை ஆராயச்சி மைய முதன்மை விஞ்ஞானி ஜெயபாஸ்கரன் ஆலோசனை வழங்கியுள்ளார்.
வாழைக்காய் அதிகப்பட்ச முதிர்வு அடைதல், நேரடி சூரிய ஒளியினால் பாதிக்கப்படுதல், காயின் உட்சதையின் பருமனைத் தாங்கும் அளவிற்கு தோல் பகுதி திடமாக இல்லாமல் இருத்தல். தோல் பகுதி அதிக வெப்பத்தினால் அல்லது வெயிலினால் நீர்ச்சத்து இழத்தலால் வெடிப்பு ஏற்படும்.
மேலும், சரியான ஊட்டச்சத்து நிர்வாகம் இல்லாமல் இருத்தல், சுண்ணாம்புச் சத்து, பொட்டாசியச் சத்து மற்றும் போரான் சத்துப் பற்றக்குறையால் காய் வெடிப்பு ஏற்படும். வெடிப்பு வழியாக பூஞ்சானம் மற்றும் பாக்டீரியா போன்றவைகளால் பாதிப்பு ஏற்படும்.
இதை தடுக்க, உர நிர்வாகம் செய்தல் அவசியம். திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் கிடைக்கும் 'பனானா சக்தி' நுண்ணூட்டச் சத்துக் கலவையை வாங்கி பயன்படுத்தலாம்.
வாழைத்தாரில் ஆண் பூ மொட்டை நீக்கியவுடன், தாரின் மேல் பாலிபுரப்பலின் உறை இட வேண்டும். அல்லது காய்ந்த சருகுகள் வைத்து சுற்றி கட்ட வேண்டும். தாரின் மேல், ஒரு லிட்டர் தண்ணீருக்கு 10 கிராம் பொட்டாசியம் சல்பேட் கரைசலை, ஒட்டும் பசையுடன் சேர்த்து நன்கு நனையும் படி தெளிக்க வேண்டும். இவ்வாறு, 15 நாள் இடைவெளியில் 3 முறை தெளிக்க வேண்டும்.
இவ்வாறு தெளிக்கும் போது, காய் வெடிப்பு தெரிந்தால், இக்கரைசலில், லிட்டர் ஒன்றுக்கு 1 கிராம் கார்பெண்டசிம் சேர்த்துக் கொண்டால், காய் வெடிப்பின் வழியாக பரவும் பூஞ்சைக் காளானத் தவிர்க்கலாம். இவ்வாறு, ஆலோசனை வழங்கியுள்ளார்.