/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வெளிமாநில தொழிலாளர்களிடம் வழிப்பறி செய்த மூவர் கைது வெளிமாநில தொழிலாளர்களிடம் வழிப்பறி செய்த மூவர் கைது
வெளிமாநில தொழிலாளர்களிடம் வழிப்பறி செய்த மூவர் கைது
வெளிமாநில தொழிலாளர்களிடம் வழிப்பறி செய்த மூவர் கைது
வெளிமாநில தொழிலாளர்களிடம் வழிப்பறி செய்த மூவர் கைது
ADDED : ஜூன் 12, 2025 10:14 PM
அன்னுார்; மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஷேக் அசாதுல் ரகுமான், 20. பாபி, 24. ஜார்க்கண்டை சேர்ந்தவர் நூனுல்லா முர்மு, 24. மூவரும் அன்னுார் அருகே தனியார் ஸ்பின்னிங் மில்லில் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் மூவரும் மைல்கல் அருகே நடந்து சென்ற போது மூன்று பேர் கத்தியை காட்டி மிரட்டி, மூன்று மொபைல் போன்கள் மற்றும் 29 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றனர். இதே போல் நேற்று முன்தினம் மாலை கோவையில் இருந்து அன்னுார் சென்ற பஸ்ஸில் ஏறிய மூவர் பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி தகராறு செய்துள்ளனர்.
இது குறித்து விசாரணை நடத்தியதில், சின்ன வேடம்பட்டி, அஜித் வீரன், 26, தேனி மாவட்டத்தை சேர்ந்த மாரிமுத்து, 29, வெள்ளை பாண்டி, 24, ஆகிய மூவரும், வழிப்பறி மற்றும் பஸ்ஸில் தகராறு செய்தவர்கள் என தெரிய வந்தது. மூவரும் மில் தொழிலாளர்கள். மூவரையும் கைது செய்த போலீசார் அன்னுார் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.