/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/சச்சிதானந்த பள்ளியில் சிந்தனை பட்டிமன்றம்சச்சிதானந்த பள்ளியில் சிந்தனை பட்டிமன்றம்
சச்சிதானந்த பள்ளியில் சிந்தனை பட்டிமன்றம்
சச்சிதானந்த பள்ளியில் சிந்தனை பட்டிமன்றம்
சச்சிதானந்த பள்ளியில் சிந்தனை பட்டிமன்றம்
ADDED : ஜன 30, 2024 10:27 PM
மேட்டுப்பாளையம்;மேட்டுப்பாளையம் அடுத்த கல்லாறில் உள்ள, சச்சிதானந்த ஜோதி நிகேதன் பன்னாட்டு பள்ளியில், மகாகவி பாரதியார் தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பில், சிறப்பு சிந்தனை பட்டிமன்றம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளியின் செயலர் கவிதாசன் தலைமை வகித்து, பட்டிமன்றத்தை துவக்கி வைத்தார். மாண்புமிகு மாணவர்களை உருவாக்குவதில், பெரிதும் துணை நிற்பது 'நல்லறிவே', 'நற்பண்புகளே' என்ற தலைப்பில், பட்டிமன்றம் நடந்தது.
கோவை அண்ணா பல்கலை கணினி துறை உதவி பேராசிரியர் விஜயபாஸ்கர் நடுவராக இருந்தார். நல்லறிவே என்ற தலைப்பில், பள்ளியின் கணிதத்துறை ஆசிரியை துர்கா தேவி, ஆசிரியர் கோகுல், மாணவர் மிஷாந்த், மாணவி பாவன்யா ஆகியோர் பேசினர்.
நற்பண்புகளே என்ற தலைப்பில், ஆங்கில ஆசிரியை மகாலட்சுமி, தமிழ் ஆசிரியர் கருப்புசாமி, மாணவர் புகழ்சக்தி, மாணவி குழலினியாள் ஆகியோர் பேசினர்.
இரு தரப்பினரின் வாதங்களுக்கு பின்னர் நடுவர் விஜய் பாஸ்கர் மாண்புமிகு மாணவர்களை உருவாக்குவதில் பெரிதும் துணை நிற்பது நற்பண்புகளே என்று தீர்ப்பளித்தார்.
அத்துடன் நல்லறிவும், நற்பண்புகளும் நாணயத்தின் இரு பக்கங்களைப் போல, கருத்தில் கொண்டு, இளம் வயதிலேயே மாணவர்கள், சிறந்த அறிவுடனும் நற்பண்புகளுடனும் திகழ வேண்டும், என்றார்.
நிகழ்ச்சியில் பள்ளியின் துணை முதல்வர் சக்திவேல் வரவேற்றார். கல்வி ஆலோசகர் கணேசன் கவிதை வாசித்தார். ஆசிரியர்கள், மாணவர்கள் திரளாக பங்கேற்றனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தமிழாசிரியர் சிவக்குமார் செய்திருந்தார்.