/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ஆண்டாள் நாச்சியார் கோவிலில் நாளை திருக்கல்யாண உற்சவம்ஆண்டாள் நாச்சியார் கோவிலில் நாளை திருக்கல்யாண உற்சவம்
ஆண்டாள் நாச்சியார் கோவிலில் நாளை திருக்கல்யாண உற்சவம்
ஆண்டாள் நாச்சியார் கோவிலில் நாளை திருக்கல்யாண உற்சவம்
ஆண்டாள் நாச்சியார் கோவிலில் நாளை திருக்கல்யாண உற்சவம்
ADDED : ஜன 10, 2024 10:26 PM
உடுமலை : உடுமலை ஆண்டாள் நாச்சியார் கோவிலில், திருக்கல்யாண உற்சவ விழா நாளை நடக்கிறது.
உடுமலை அருகே குறிஞ்சேரியில், ஸ்ரீ ரங்கமன்னார் சமேத ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் கோவில் உள்ளது.
இக்கோவிலில் திருக்கல்யாணம் உற்சவ விழா இன்று துவங்குகிறது. கோவிலில் இன்று காலை, 9:00 மணிக்கு ஸ்ரீ பூமிலட்சுமி அம்மனுக்கு அபிேஷகமும், மாலை, 7:00 மணிக்கு பவளக்கொடி கும்மியாட்டமும், தொடர்ந்து சீர் கொண்டு வருதல், உடன் உற்சவர் திருமஞ்சனமும் நடக்கிறது.
விழாவில், நாளை (12ம் தேதி) காலை,7:00 மணிக்கு கோ பூஜையும், பகல், 11:00 முதல் 12:00 மணிக்குள் ஸ்ரீ ரங்கமன்னார் - ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் திருக்கல்யாணமும் நடைபெறுகிறது. தொடர்ந்து அன்னதானம் நடக்கிறது.