/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பரமசிவன் கோவிலில் திருக்குட நன்னீராட்டுபரமசிவன் கோவிலில் திருக்குட நன்னீராட்டு
பரமசிவன் கோவிலில் திருக்குட நன்னீராட்டு
பரமசிவன் கோவிலில் திருக்குட நன்னீராட்டு
பரமசிவன் கோவிலில் திருக்குட நன்னீராட்டு
ADDED : பிப் 11, 2024 11:56 PM
நெகமம்:நெகமம், கப்பளாங்கரை, பரமசிவன் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா, வரும் 15ம் தேதி நடக்கிறது.
நெகமம், கப்பளாங்கரையில் உள்ள பரமசிவன் கோவிலில் திருக்குட நன்னீராட்டு விழா இன்று (12ம் தேதி) துவங்குகிறது. திருவிளக்கு வழிபாடு, பிள்ளையார் வழிபாடு, முளைப்பாலிகை வழிபாடு நடக்கிறது.
நாளை, 13ம் தேதி, காலை 7:00 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு வேள்வி மற்றும் காப்பு கட்டுதல் நடக்கிறது. மாலை 6:00 மணிக்கு, முதற்கால வேள்வி மற்றும் அருட்பிரசாதங்கள் வழங்குதல் நடக்கிறது. வரும், 14ம் தேதி, காலை, 6:00 மணிக்கு, திருப்பள்ளி எழுச்சி, மங்கள இசை, திருக்குறிப்புத் திருமஞ்சனம் நடக்கிறது. காலை, 10:00 மணிக்கு, இரண்டாம் கால வேள்வி, விமான கலசங்கள் நிறுவுதல், எண் வகை மருந்து சாற்றுதல் மற்றும் அருட்பிரசாதங்கள் வழங்குதல் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, மூன்றாம் கால வேள்வி நடக்கிறது. 15ம் தேதி, காலை 7:40 மணிக்கு, சுவாமிகளுக்கு திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடக்கிறது.