/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மூன்றாவது டிவிஷன் கிரிக்கெட்; கொங்கு கிரிக்கெட் கிளப் வெற்றி மூன்றாவது டிவிஷன் கிரிக்கெட்; கொங்கு கிரிக்கெட் கிளப் வெற்றி
மூன்றாவது டிவிஷன் கிரிக்கெட்; கொங்கு கிரிக்கெட் கிளப் வெற்றி
மூன்றாவது டிவிஷன் கிரிக்கெட்; கொங்கு கிரிக்கெட் கிளப் வெற்றி
மூன்றாவது டிவிஷன் கிரிக்கெட்; கொங்கு கிரிக்கெட் கிளப் வெற்றி
ADDED : மார் 25, 2025 10:23 PM

கோவை; கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில் மூன்றாவது டிவிஷன் 'என்.தாமோதரன் வெல்பேர் டிரஸ் டிராபி' போட்டி, ஸ்ரீ சக்தி இன்ஜி., கல்லுாரி மைதானத்தில் நடந்தது. இதில், கொங்கு கிரிக்கெட் கிளப் அணியும், ஸ்ரீ சக்தி இன்ஜி., மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி கிரிக்கெட் கிளப் அணியும் மோதின.
முதலில் பேட்டிங் செய்த, கொங்கு கிரிக்கெட் கிளப் அணி, 50 ஓவரில், 9 விக்கெட்டுக்கு, 287 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக வீரர் சஞ்சீவ், 80 ரன்களும், டெரின் ஜெரால்டு, 57 ரன்கள், செந்தில், 55 ரன்கள், சிவசாமி, 30 ரன்கள் எடுத்தனர்.
ஸ்ரீ சக்தி கிரிக்கெட் கிளப் வீரர்சபரி ஹரிஹரன், 41 ரன்களுடன்,மூன்று விக்கெட்கள்(ஹேட்ரிக்) வீழ்த்தினார். அடுத்து விளையாடிய, ஸ்ரீ சக்தி கிரிக்கெட் கிளப் அணி, 42.2 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து, 158 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக வீரர் முகமது அப்சன், 62 ரன்களும், விக்னேஷ், 38 ரன்களும் எடுத்தனர். கொங்கு கிரிக்கெட் கிளப் வீரர் இசக்கி, 20 ரன்களுடன், மூன்று விக்கெட்கள் வீழ்த்தினார்.