Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பஸ்களில் இனி சில்லரை பிரச்னை இருக்காது டிஜிட்டல் பணபரிவர்த்தனை வந்தாச்சு

பஸ்களில் இனி சில்லரை பிரச்னை இருக்காது டிஜிட்டல் பணபரிவர்த்தனை வந்தாச்சு

பஸ்களில் இனி சில்லரை பிரச்னை இருக்காது டிஜிட்டல் பணபரிவர்த்தனை வந்தாச்சு

பஸ்களில் இனி சில்லரை பிரச்னை இருக்காது டிஜிட்டல் பணபரிவர்த்தனை வந்தாச்சு

ADDED : ஜூன் 20, 2025 02:34 AM


Google News
பொள்ளாச்சி : பொள்ளாச்சி பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் அனைத்து அரசு பஸ்களிலும், க்யூ.ஆர்.கோடு., ஏ.டி.எம்., கார்டு வாயிலாக, டிக்கெட் கட்டணம் செலுத்தும் வசதி செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

அரசு போக்குவரத்து கழகங்களை, நவீன தொழில்நுட்பங்களுடன் டிஜிட்டல் மயமாக்கி, மக்களுக்கு பஸ் சேவைகளை எளிமைப்படுத்த, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிப்பதன் வாயிலாக, 'டிஜிட்டல்' சேவைகளை பயணியருக்கு வழங்க திட்டமிடப்பட்டது. அதன்படி, கட்டணம் செலுத்த க்யூ.ஆர்., கோடு மற்றும் ஏ.டி.எம்., கார்டு வாயிலாக டிக்கெட் கட்டணம் செலுத்தும் வசதி நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பெருநகரங்களைத் தொடர்ந்து, தற்போது, பொள்ளாச்சியிலும் திட்டம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

அரசு போக்குவரத்து கழகம், பொள்ளாச்சி கிளை 1ல், 26 புறநகர் பஸ், 34 டவுன் பஸ்கள்; கிளை 2ல், 32 புறநகர், 35 டவுன் பஸ்கள்; கிளை, 3ல், 28 புறநகர், 32 டவுன்பஸ்கள் என, தினமும், 187 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

இந்த பஸ்கள் அனைத்திலும், க்யூ.ஆர்., கோடு வசதி மற்றும் ஏ.டி.எம்., கார்டு வாயிலாக டிக்கெட் கட்டணம் செலுத்தும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது.

அதாவது, கண்டக்டர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 'டச் ஸ்கிரீன்' இ.டி.எம்., மெஷின் வாயிலாக க்யூ.ஆர்., கோடு ஸ்கேன் கட்டணம் செலுத்தலாம். அல்லது, ஏ.டி.எம்., கார்டு 'ஸ்வைப்பிங்' செய்தும் டிக்கெட் கட்டணம் செலுத்தலாம். இதன் வாயிலாக மக்கள் எளிதில் பணப்பரிவர்த்தனைகளை செய்து கொள்ள முடியும்.

இதனால், பயணியர் சில்லரை தேடி அலைவது தவிர்க்கப்படும். டிக்கெட் கட்டணம் போக, மீதி சில்லரை வழங்க வேண்டிய சிரமும் கண்டக்டர்களுக்கு இருக்காது.

இவ்வாறு, கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us