/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அரங்கநாதர் கோவிலில் மூன்று முக்கிய விழாக்கள்அரங்கநாதர் கோவிலில் மூன்று முக்கிய விழாக்கள்
அரங்கநாதர் கோவிலில் மூன்று முக்கிய விழாக்கள்
அரங்கநாதர் கோவிலில் மூன்று முக்கிய விழாக்கள்
அரங்கநாதர் கோவிலில் மூன்று முக்கிய விழாக்கள்
ADDED : பிப் 24, 2024 01:20 AM
ம ன்னர்கள் வழிபட்ட, காரமடை அரங்கநாதர் கோவிலில் மூன்று விழாக்கள் வெகு விமர்சையாக நடைபெறும்.
கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ ஸ்தலம், காரமடை அரங்கநாதர் கோவில். இக்கோவில், 500 ஆண்டுகளுக்கு மேலான பழமையான கோயிலாகும்.
கரிகாற்சோழன், மைசூர் மன்னர் கிருஷ்ணராஜ உடையார், மதுரை மாமன்னர் திருமலை நாயக்கர் ஆகிய மன்னர்கள், இக்கோவிலில் அரங்கநாத பெருமாளை வழிபட்டு சென்றதாக, தாமிர சாசன பட்டயங்கள் உள்ளன.
புரட்டாசி மாதம் ஐந்து சனிக்கிழமை விழா, சிறப்பாக நடைபெறும். மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விழாவில், சொர்க்கவாசல் திறப்பு, பெருவிழாவாக நடைபெறும்.
இதில், பகல் பத்து, ராப்பத்து உற்சவத்தில், பெருமாள் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். அதைத் தொடர்ந்து, மாசி மகத்தேர்த்திருவிழா நடைபெறும். இவ்விழாவில் லட்சம் பக்தர்களுக்கு மேல் பங்கேற்பர். காரமடை அரங்கநாதர் கோவிலில், புரட்டாசி சனிக்கிழமை விழா, வைகுண்ட ஏகாதசி, மாசி மகத்தேர் திருவிழா ஆகிய மூன்று விழாக்கள் சிறப்பாக நடைபெறும்.