Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/காத்திருக்கும் மாணவர்கள் உள்ளேன் அய்யா! ஆசிரியர் பணியிடங்கள் 'காலி'

காத்திருக்கும் மாணவர்கள் உள்ளேன் அய்யா! ஆசிரியர் பணியிடங்கள் 'காலி'

காத்திருக்கும் மாணவர்கள் உள்ளேன் அய்யா! ஆசிரியர் பணியிடங்கள் 'காலி'

காத்திருக்கும் மாணவர்கள் உள்ளேன் அய்யா! ஆசிரியர் பணியிடங்கள் 'காலி'

ADDED : ஜூன் 28, 2024 11:27 PM


Google News
அன்னுார்:அன்னுார் வட்டாரம் உள்பட பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் கற்பித்தல் பாதிக்கப்பட்டுள்ளது.

அன்னூர் வட்டாரத்தில், 75 துவக்க, 16 நடுநிலைப் பள்ளிகள், மூன்று உயர்நிலைப் பள்ளிகள், ஆறு மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் 8,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

கடந்த 2023 மே மாதமும், 2024 மே மாதமும், 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். ஆனால், இந்த பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இதனால் பள்ளிகளில் கற்பித்தல் பாதிக்கப்பட்டுள்ளதாக பெற்றோர் புகார் தெரிவித்துள்ளனர்.

பெற்றோர் கூறுகையில், 'பொன்னே கவுண்டன்புதூர் அரசு துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் வழக்கு காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

ஐந்தாண்டுகளாகியும், இதுவரை தலைமை ஆசிரியர் பணியிடம் நிரப்பப்படவில்லை. அன்னூர் வட்டாரத்தில் மிக அதிக அளவில் மாணவ, மாணவியர் படித்து வரும் ஆம்போதி, பிள்ளையப்பம்பாளையம், ஒட்டர்பாளையம் மற்றும் வடக்கலுார் நடுநிலைப் பள்ளிகளில் தலைமையாசிரியர் பணியிடங்கள் ஓராண்டாக காலியாக உள்ளது. முகாசிசெம்சம்பட்டி துவக்க பள்ளியிலும் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது. குப்பனூர் ஊராட்சியில் உள்ள ஆணையூர் துவக்கப் பள்ளியில், 95 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

இங்கு இரண்டு ஆசிரியர்கள் மட்டும் உள்ளனர். இங்கு தலைமை ஆசிரியர் பணியிடம் ஓராண்டுக்கு மேலாக காலியாக இருப்பதால் கற்பித்தல் பாதிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆசிரியர்களில், ஒருவர் எண்ணும் எழுத்தும் பயிற்சி அல்லது பிற பணிகளுக்காக தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்துக்கு செல்லும்போது, ஒரே ஆசிரியர் 95 மாணவ, மாணவியருக்கு கற்பிக்க வேண்டி உள்ளது.

காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பணியிடங்களை, உடனடியாக அரசு நிரப்ப வேண்டும். அரசு பள்ளிகளில் சேர்க்கை அதிகரித்து வரும் நிலையில் ஆசிரியர் காலி பணியிடங்களால் பள்ளிகளில் கல்வித்தரம் பாதிக்கும் நிலை ஏற்படும்' என்றனர்.

20 நாள் ஆச்சு!

ஆசிரியர் சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'தமிழகம் முழுவதும் கடந்த ஓராண்டாக, 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துவக்க, நடுநிலை, உயர்நிலை பள்ளிகளில், ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.கடந்தாண்டு காலி பணியிடங்கள் உள்ள சில பள்ளிகளில் கற்பித்தல் பாதிக்காமல் இருக்க தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த ஆண்டு பள்ளி துவங்கி, 20 நாட்களாகியும் இன்னும் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க எந்த நடவடிக்கையும் இல்லை' என்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us