/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ வீரல்பட்டியில் அடிப்படை வசதிகளில்லை! பொதுமக்கள், பா.ஜ.,வினர் மனு வீரல்பட்டியில் அடிப்படை வசதிகளில்லை! பொதுமக்கள், பா.ஜ.,வினர் மனு
வீரல்பட்டியில் அடிப்படை வசதிகளில்லை! பொதுமக்கள், பா.ஜ.,வினர் மனு
வீரல்பட்டியில் அடிப்படை வசதிகளில்லை! பொதுமக்கள், பா.ஜ.,வினர் மனு
வீரல்பட்டியில் அடிப்படை வசதிகளில்லை! பொதுமக்கள், பா.ஜ.,வினர் மனு
ADDED : ஜூன் 23, 2025 11:11 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, வீரல்பட்டியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என, சப் - கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்து வலியுறுத்தப்பட்டது.
வீரல்பட்டி பகுதி மக்கள் மற்றும், பொள்ளாச்சி நகர பா.ஜ., தலைவர் பரமகுரு ஆகியோர், பொள்ளாச்சி சப் -கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:
பொள்ளாச்சி கரட்டுப்பாளையத்தில் இருந்து வீரல்பட்டி செல்லும் ரோடு குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், விபத்துகள் ஏற்படுகின்றன. வாகன ஓட்டுநர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.
வீரல்பட்டியில் குடிநீர் முறையாக வழங்கி பல மாதங்களாகின்றன. முறையாக குடிநீர் வழங்க கோரிக்கை விடுத்தும் பலன் இல்லை.
கிராமத்தில், கோழிப்பண்ணை முறையாக பராமரிக்கப்படுவதில்லை. பண்ணையின் கீழ், கோழி எச்சங்களுடன் சேர்ந்து தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள், விஷ பூச்சிகள், ஈக்கள் பெருகியுள்ளது. இதனால், சுற்றுவட்டாரத்தில் உள்ள வீடுகளில் பொதுமக்களின் சுகாதாரம் பாதிக்கிறது. இது குறித்து உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு பஸ் வழித்தட எண் 47ஏ, தினமும் காலை, 7:30 மணிக்கு வீரல்பட்டிக்கு வந்து எரிசனம்பட்டி சென்று, சமத்துார் வழியாக பொள்ளாச்சி செல்லும் போது வீரல்பட்டி வழியாக இயக்க வேண்டும். அதேபோன்று, தினமும் மாலை, 5:00 மணிக்கு வீரல்படிக்கு வந்து, எரிசனம்பட்டி சென்று, சமத்துார் வழியாக பொள்ளாச்சி நோக்கி செல்லும் போது வீரல்பட்டி வழியாக இயக்க வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வீரல்பட்டிக்கு இயக்கப்பட்ட அரசு டவுன் பஸ் எண், 7பி, 47ஏ, ஆகியவற்றை மீண்டும் இயக்க வேண்டும். பொள்ளாச்சி - தேவனுார்புதுார் செல்லும் பஸ் (டவுன் பஸ் எண்,56) அனைத்து முறையும் வீரல்பட்டி வழியாக இயக்க வேண்டும். தற்போது, காலை, மாலை நேரத்தில் இந்த பஸ் வீரல்பட்டி வருவதில்லை. முறையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.