ADDED : ஜன 04, 2024 10:41 PM

அன்னூர்:மொண்டிபாளையம் அருகே திம்மநாயக்கன் புதூரில், மகா பைரவர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமி நாளன்று சிறப்பு வழிபாடு நடக்கிறது.
நேற்று முன்தினம் இரவு 7:00 மணிக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், பன்னீர் உள்ளிட்ட திரவியங்களால் பைரவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதையடுத்து அலங்கார பூஜை நடந்தது. இக்கோவில் வளாகத்தில் கொங்கு மண்டலத்தில் முதல் முறையாக வடக்கு நோக்கி சொர்ண ஆகர்சன பைரவர் நிலை நிறுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து சிறப்பு வேள்வி பூஜை நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.