/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மூதாட்டி இறந்த சம்பவத்தில் தியேட்டர் மேலாளருக்கு சிறை மூதாட்டி இறந்த சம்பவத்தில் தியேட்டர் மேலாளருக்கு சிறை
மூதாட்டி இறந்த சம்பவத்தில் தியேட்டர் மேலாளருக்கு சிறை
மூதாட்டி இறந்த சம்பவத்தில் தியேட்டர் மேலாளருக்கு சிறை
மூதாட்டி இறந்த சம்பவத்தில் தியேட்டர் மேலாளருக்கு சிறை
ADDED : ஜூன் 06, 2025 11:49 PM
கோவில்பாளையம்,; மூதாட்டி இறந்த விபத்தில் தப்பிய தியேட்டர் மேலாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
கோவில்பாளையம், வி.ஐ.பி., கோல்டன் சிட்டியை சேர்ந்த அழகர்சாமி மனைவி சசிகலா, 76. இவர் கடந்த 4ம் தேதி காலை சத்தி சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது ஒரு கார் மோதி விட்டு நிற்காமல் சென்றது.
இந்த விபத்தில் சசிகலா படுகாயம் அடைந்து இறந்தார். போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து சத்தி சாலையில் உள்ள 'சிசிடிவி,' கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
ஆய்வில் காரை ஓட்டி வந்தவர் விழுப்புரம் மாவட்டம், நங்கத்தூரை சேர்ந்த சுதர்சன், 28, சினிமா தியேட்டரில் மேலாளர் என தெரிய வந்தது. இவர் அதிவேகமாக காரை ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் படுகாயம் அடைந்த மூதாட்டிக்கு உதவாமல் தப்பி சென்றுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அன்னூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.