/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 'மரப்பாலம் ரயில்வே பாலம் பணியை விரைந்து முடிக்கணும்' 'மரப்பாலம் ரயில்வே பாலம் பணியை விரைந்து முடிக்கணும்'
'மரப்பாலம் ரயில்வே பாலம் பணியை விரைந்து முடிக்கணும்'
'மரப்பாலம் ரயில்வே பாலம் பணியை விரைந்து முடிக்கணும்'
'மரப்பாலம் ரயில்வே பாலம் பணியை விரைந்து முடிக்கணும்'
ADDED : ஜூன் 27, 2025 11:06 PM
கோவை; மதுக்கரை மரப்பாலம் -ரயில்வே பாலம் அகலப்படுத்தும் பணியை, -விரைந்து முடிக்க வேண்டும் என, கோரி மதுக்கரை ஒன்றியம் இ.கம்யூ., சார்பில் மதுக்கரை தாசில்தார் மற்றும் நகராட்சி கமிஷனரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இ.கம்யூ., மதுக்கரை ஒன்றிய செயலாளர் சக்திவேல் கூறியிருப்பதாவது:
மரப்பாலம் பகுதியில் உள்ள ரயில்வே பாலம் அகலப்படுத்தும் பணி நடந்து வருகிறது. இதனால் கோவையில் இருந்து பாலக்காடு தேசிய நெடுஞ்சாலையை அடையும் பிரதான சாலை, தற்காலிகமாக மூடப்பட்டு வாகனங்கள் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
இந்த பணியில் தொய்வு ஏற்பட்டு, பணிகள் முடியாமல் கால தாமதமாக நடந்து வருகிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது.
அந்த பகுதியில் அமைந்துள்ள கிராமங்களிலிருந்து அன்றாடம் வேலைக்குச் செல்வோரும், கோவையில் இருந்து பள்ளி, கல்லுாரிகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே இது குறித்து, நகராட்சி கமிஷனருக்கு மனு அளித்தும் நடவடிக்கை இல்லை. இந்த பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.