/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ முன்னெச்சரிக்கையாக வெட்டப்பட்டது மரம் முன்னெச்சரிக்கையாக வெட்டப்பட்டது மரம்
முன்னெச்சரிக்கையாக வெட்டப்பட்டது மரம்
முன்னெச்சரிக்கையாக வெட்டப்பட்டது மரம்
முன்னெச்சரிக்கையாக வெட்டப்பட்டது மரம்
ADDED : மே 26, 2025 11:59 PM
போத்தனூர்; கோவையில் கடந்த சில நாட்களாக, பரவலாக மழை பெய்து வருகிறது. ஆங்காங்கே மரங்கள் சாய்ந்து விழுகின்றன.அதுபோல் குறிச்சி, சிட்கோ தொழிற்பேட்டை வளாகத்தில் மரம் ஒன்று விழுந்தது. தகவலறிந்த தீயணைப்பு படையினர், மரத்தை வெட்டி அகற்றினர்.
சாரதா மில் சாலையில், ஆட்டுத்தொட்டி பஸ் ஸ்டாப் அருகே, மே பிளவர் மரம் ஒன்று வளர்ந்திருந்தது. இதன் அடிபாகம் வலுவிழந்து காணப்பட்டது. இதையடுத்து மரம் விழுந்து அசம்பாவிதம் ஏற்படுவதை தவிர்க்க, மாநகராட்சி ஊழியர்கள் வெட்டி அகற்றினர்.