/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ நிரம்பி ததும்பும் சோலையாறு; பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சி நிரம்பி ததும்பும் சோலையாறு; பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சி
நிரம்பி ததும்பும் சோலையாறு; பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சி
நிரம்பி ததும்பும் சோலையாறு; பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சி
நிரம்பி ததும்பும் சோலையாறு; பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 30, 2025 10:40 PM

வால்பாறை; சோலையாறு அணை, தொடர்ந்து நான்காவது நாளாக நிரம்பிய நிலையில் காட்சியளிப்பதால் பாசன விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
வால்பாறையில் கடந்த இரு வாரங்களாக பெய்த தென்மேற்கு பருவமழையினால், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணை கடந்த, 27ம் தேதி அதிகாலை நிரம்பியது. இதனை தொடர்ந்து சேடல்டேம் வழியாக பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
காற்றுடன் கூடிய கனமழை பெய்ததால், பல்வேறு இடங்களில் மரம் விழுந்தும், மண் சரிந்தும் பாதிப்பு ஏற்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக வால்பாறையில் சாரல் மழை மட்டுமே பெய்கிறது. மழைப்பொழிவு குறைந்ததால், இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பியுள்ளனர்.
வால்பாறையில் இருந்து, ஈட்டியார் செல்லும் ரோட்டில் மண் சரிந்து, போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 162.03 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 3,406 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. வினாடிக்கு, 4,042 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மழைப்பொழிவு குறைந்த நிலையிலும், நான்காவது நாளாக சோலையாறு அணை நிரம்பிய நிலையில் காட்சியளிப்பதால், பி.ஏ.பி., விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.