/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ குண்டும் குழியுமானது சாலை போலீசாரே சரி செய்யும் நிலை குண்டும் குழியுமானது சாலை போலீசாரே சரி செய்யும் நிலை
குண்டும் குழியுமானது சாலை போலீசாரே சரி செய்யும் நிலை
குண்டும் குழியுமானது சாலை போலீசாரே சரி செய்யும் நிலை
குண்டும் குழியுமானது சாலை போலீசாரே சரி செய்யும் நிலை
ADDED : ஜூன் 21, 2025 12:19 AM

கோவை : மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் குண்டும் குழியுமான சாலைகளை, போலீசாரே சரி செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.
மாநகரில், மேம்பாலம், ரவுண்டானா அமைப்பு, பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகளுக்காக பல்வேறு இடங்களில் சாலைகள் தோண்டப்பட்டன.
அவை முறையாக சரி செய்யப்படுவதில்லை. வீதிகளில் செல்லும் சாலைகள் முதல் பிரதான சாலைகள் வரை, அனைத்தும் குண்டும் குழியுமாக உள்ளன.
இதனால் மழை பெய்யும் போதும், இரவு நேரங்களிலும் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுகின்றனர். பெரும்பாலான பகுதிகளில் இந்த பிரச்னை உள்ளது. அதிகாரிகள் மற்றும் கவுன்சிலர்களிடம் தெரிவித்தும் யாரும் கண்டு கொள்ளவில்லை.
இதனால், விபத்துகளை தவிர்க்க பல்வேறு ஸ்டேஷன்களில் பணியாற்றும் போலீசாரே, சாலைகளில் இறங்கி மண், கல் போட்டு, சரி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று, சுங்கம் பைபாஸ் மற்றும் கோவை கோர்ட் வளாகம் முன் உள்ளிட்ட முக்கிய இடங்களில் போலீஸ் இஸ்பெக்டர், எஸ்.ஐ.,க்கள் சாலையில் மண் போட்டு சரி செய்தனர்.