/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/அயோத்தி மக்களின் பக்தி அளப்பரியது: கோவிலூர் ஆதின மடாதிபதி புகழாரம் அயோத்தி மக்களின் பக்தி அளப்பரியது: கோவிலூர் ஆதின மடாதிபதி புகழாரம்
அயோத்தி மக்களின் பக்தி அளப்பரியது: கோவிலூர் ஆதின மடாதிபதி புகழாரம்
அயோத்தி மக்களின் பக்தி அளப்பரியது: கோவிலூர் ஆதின மடாதிபதி புகழாரம்
அயோத்தி மக்களின் பக்தி அளப்பரியது: கோவிலூர் ஆதின மடாதிபதி புகழாரம்
ADDED : ஜன 31, 2024 02:13 AM

கோவை:''அயோத்தியில் வாழும் மக்களின் பக்தி அளப்பரியது; பக்தியின் உச்சம் இது தான் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்தது,'' என்று, கோவிலூர் ஆதினம் தமிழ் வேதாந்த மடத்தின் மடாதிபதி சீர்வளர் சீர் நாராயண ஞானதேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் கூறினார்.
அயோத்தி ராமர் கோவில் பிராணபிரதிஷ்டை விழாவில் பங்கேற்ற அவர், நமது நாளிதழுக்கு அளித்த பேட்டி:
அயோத்தி ராமர் கோவிலுக்கு செல்லவேண்டும் என்ற தெய்வசங்கல்பம் இருந்தது. அதனால் தான் முதல் நாளிலேயே செல்ல வாய்ப்பு கிடைத்தது.
மடாதிபதிகள், ஆதினங்கள் உலகம் முழுக்க சென்றிருக்கின்றனர். ஆனால் உதவியாளர்கள் இன்றி சென்றதில்லை. அங்கெல்லாம் மடாதிபதிகளாகவே வலம் வந்தோம்.
அயோத்தி ராமர் கோவிலுக்கு, தனி ஒரு பக்தராகவே சென்று ஸ்ரீராமபிரானை தரிசித்தோம். ஸ்ரீ ராமரை பார்த்ததும் பக்தியால் பரவசமடைந்தேன்.
சுவாமி தரிசனம் நிறைவு செய்து திரும்பிய போது, கோவிலுக்கு வெளியே எங்களை எதிர்க்கொண்டு வழியனுப்ப, ஒரு லட்சம் மக்கள் காத்திருந்தனர். அவர்கள், 'ஜெய்ஸ்ரீராம்' என்று கோஷமிட்டு கீழே சாஷ்டாங்கமாக வணங்கி, எங்களுக்கு விடை கொடுத்து அனுப்பினர்.
இது போன்ற நிகழ்வு, எங்குமே நடக்காத அதிசயம்.
அயோத்தி நகரமே தெய்வீகமாக இருந்தது மட்டுமல்லாமல், அங்கிருந்த மக்களும் ராமநாமத்தை சொல்லிக்கொண்டே இருந்தனர். அயோத்தி மக்களின் பக்தி அளப்பரியது; பக்தியின் உச்சம் இது தான் என்பதை உணர்ந்தோம்.
காசி விஸ்வநாதர் கோவிலுக்கு, நகரத்தார் சத்திரம் சார்பில் அன்றாடம் நடைபெறும் மூன்று கால பூஜைகளுக்கான மங்கல பொருட்களை சமர்ப்பிக்கப்படுகிறது. அதே போல் அயோத்தி ராமர் கோவிலிலும், ஸ்ரீ ராமபிரானுக்கு நடைபெறும் மூன்று காலபூஜையில், ஒரு கால பூஜைக்கான மங்கல பொருட்களை சமர்ப்பிக்க, நகரத்தார் சத்திரம் சார்பில் விருப்பத்தையும், வேண்டுகோளையும் விடுத்திருக்கிறோம்.
ராமஜென்மபூமியில் ஆண்டுதோறும், ஸ்ரீராமநவமியன்று வலம் வருவதற்கு நகரத்தார் சத்திரம் சார்பில் ரதம் செய்து கொடுத்திருக்கிறோம். அயோத்திக்கு சென்று திரும்பிவிட்டேன். ஆனால், ராமர் கோவிலும், ஸ்ரீ ராமர் சிலையும் என் மனதில் இருந்து அகல மறுக்கிறது. திரும்பவும் எப்போது செல்வோம் என்ற ஏக்கத்திலேயே, என் மனம் உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.