/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தொழில்துவங்க மூலதனம் புத்திசாலித்தனம் மட்டுமே; திறமை இருந்தால் போதும்; வழி காட்டுதல்கள் ஏராளம் தொழில்துவங்க மூலதனம் புத்திசாலித்தனம் மட்டுமே; திறமை இருந்தால் போதும்; வழி காட்டுதல்கள் ஏராளம்
தொழில்துவங்க மூலதனம் புத்திசாலித்தனம் மட்டுமே; திறமை இருந்தால் போதும்; வழி காட்டுதல்கள் ஏராளம்
தொழில்துவங்க மூலதனம் புத்திசாலித்தனம் மட்டுமே; திறமை இருந்தால் போதும்; வழி காட்டுதல்கள் ஏராளம்
தொழில்துவங்க மூலதனம் புத்திசாலித்தனம் மட்டுமே; திறமை இருந்தால் போதும்; வழி காட்டுதல்கள் ஏராளம்
ADDED : மே 15, 2025 11:36 PM

கோவை; ' வேண்டாம், கடன் வேண்டாம்... புத்திசாலித்தனம் இருந்தால் போதும்; தொழில் துவங்க முடியும்'. கோவையில் நடக்கும் சப்கான் 2025 கண்காட்சியில் தான் இதற்கான வழிகாட்டுதல் கிடைக்கிறது.
கோவை - அவிநாசி ரோட்டில் உள்ள தொழில் கண்காட்சி வளாகத்தில், சப்கான் 2025 கண்காட்சி இரண்டு நாட்களாக நடக்கிறது; இன்று நிறைவு பெறுகிறது. வாங்குவோரும் விற்போரும் சந்தித்து தேவைகளை பரிமாற்றம் செய்து கொள்ளும் வாய்ப்பை தருகிறது இந்த வர்த்தக கண்காட்சி.
கோவை நிறுவனங்கள் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களிலிருந்தும் தொழில் நிறுவனங்கள் அரங்குகள் அமைத்துள்ளன. 250க்கும் மேற்பட்ட அரங்குகளில் தொழில்நுட்பங்கள் குவிந்துள்ளன.
இதில், தமிழ்நாடு அதிநவீன உற்பத்திக்கான சிறப்பு மையம் டான்காம் அரங்கும் இடம்பெற்றுள்ளது. சென்னை, கோவை, தஞ்சாவூர், திருச்சி, சேலம், ஒசூர் நகரங்களில் மட்டுமே டான்காம் செயல்பட்டு வருகிறது. டிட்கோ, டிசால்ட் சிஸ்டம்ஸ் ஆகியவை இணைந்து டான்காம் செயல்படுகிறது.
இதன் செயல்பாடுகள் குறித்து தொழில் பிரிவு மேலாளர் ஆல்வின் கிறிஸ்டோ கூறுகையில், “தொழில் முனைவோருக்கு தேவை ஒரே ஒரு ஐடியா தான். மாணவர்களாகவோ, தொழில் செய்து வருபவர்களாகவோ, புத்தாக்க தொழில் தொடங்குவோராகவோ அவர்கள் இருக்கலாம். தரமான யோசனை இருந்தால், அதை உருவாக்கும் முனைப்பு இருந்தால் அவற்றுக்கு அரசு உதவுகிறது. ஆரம்ப கட்ட பயிற்சி முதல், பொருட்களை உற்பத்தி செய்வது வரை அனைத்துக்கும் உடனிருந்து உதவி செய்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள பயிற்சி மையங்களில் பயிற்சி தருகிறது. சாப்ட்வேர் தவிர அனைத்து துறைகளிலும் உங்களது எண்ணங்களை, செயல்வடிவம் கொடுத்து முழுமையடையச் செய்ய டான்காம் உதவுகிறது. கோவையில் குமரகுரு கல்லுாரி, கருணாநிதி தொழில்நுட்ப கல்லுாரி, கொசிமா போன்ற இடங்களில் இதன் பயிற்சி மையங்கள் உள்ளன. கம்ப்யூட்டர் சார் வடிவமைப்புகள், டிஜிட்டல் உற்பத்திகள், ஓட்ட அளவீடுகள் மட்டுமின்றி, பல்வேறு வகுப்புகளை நடத்தி வருகிறது. தொழில் முனைவோருக்கு தேவை எல்லாம், என்ன செய்யப்போகிறோம்; செயலாக்க திட்டம் தான்.
அதை வழி நடத்தி உருவாக்க அரசு இந்த சிறப்பு மையத்தில் உதவி செய்யும்,” என்றார்.
கோவையில் நடக்கும் சப்கான் 2025 கண்காட்சி இன்று நிறைவு பெறுகிறது. உங்களுக்கும் ஐடியா இருந்தால், இந்த அரங்கை பார்வையிட்டு பயன்பெறலாம்.
கண்காட்சி அரங்குகளில் உள்ளுர் மோட்டார் தொழில் முதல் ராணுவ தளவாடங்கள், வின்வெளி ஆராய்ச்சி வரை அத்தனை தொழில்நுட்பங்களும் இடம் பிடித்துள்ளன. இந்த கண்காட்சி காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடக்கிறது.