/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்! மாநில செயற்குழு வலியுறுத்தல் பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்! மாநில செயற்குழு வலியுறுத்தல்
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்! மாநில செயற்குழு வலியுறுத்தல்
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்! மாநில செயற்குழு வலியுறுத்தல்
பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்! மாநில செயற்குழு வலியுறுத்தல்
ADDED : செப் 21, 2025 11:04 PM

பொள்ளாச்சி; 'பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்,' என, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்ற தொழிலாளர் மற்றும் அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்ற தொழிலாளர் மற்றும் அலுவலர் சங்க மாநில செயற்குழு கூட்டம், பொள்ளாச்சியில் நடந்தது. மாநில தலைவர் அருணாச்சலம் தலைமை வகித்தார். மாநில துணை பொதுச் செயலாளர் சக்திவேலு வரவேற்றார்.
மாநில பொதுச் செயலாளர் சுடலை ஆண்டறிக்கையையும், பொருளாளர் சிவசுப்பு பாண்டியன் வரவு செலவு அறிக்கையையும் சமர்பித்தனர்.
டி.என்.இ.பி. எம்ப்ளாயிஸ் பெடரேஷன் மாநில தலைவர் பாஸ்டின் ராஜ், மாநில பொதுச் செயலாளர் சேக்கிழார் ஆகியோர் பேசினர். மாநில நிர்வாகிகள், கிளை பொறுப்பாளர்கள் பங்கேற்று பேசினர். மாநில செயலாளர் மயில்சாமி நன்றி கூறினார்.
கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். மருத்துவ செலவுக்கான தொகை வழங்குவதில் உள்ள குறைகளை சரி செய்ய வேண்டும்.
திருமணமாகாத, விவாகரத்தான, விதவை மகள் தொடர்ந்து குடும்ப ஓய்வூதியம் பெற்றிட ஆண்டு தோறும் தாசில்தாரிடமிருந்து, மூன்று சான்றுகள் பெறுவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
கருணைத்தொகை பெறுபவர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க வேண்டும். இவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.