Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மனமும் உடலின் ஒரு முக்கிய உறுப்பு!

மனமும் உடலின் ஒரு முக்கிய உறுப்பு!

மனமும் உடலின் ஒரு முக்கிய உறுப்பு!

மனமும் உடலின் ஒரு முக்கிய உறுப்பு!

ADDED : அக் 10, 2025 12:38 AM


Google News
Latest Tamil News
'ம னமும் உடலின் ஒரு முக்கிய உறுப்பு. அதை பேணி பாதுகாத்து நலமாக வைத்திருப்பது நமது பொறுப்பு' என, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை மூத்த மனநல சிகிச்சை மருத்துவர் ஸ்ரீனிவாசன் கூறினார்.

மேலும் அவர் கூறியதாவது:

ஐந்தில் ஒருவர், அவரது வாழ்நாளில் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் மன நலப்பிரச்னைக்கு ஆளாவார். வளரிளம் பருவத்தில் 100க்கு 15 பேருக்கு இது இருக்க வாய்ப்புள்ளது. பொதுவாக மூன்று விதமான மன நோய்கள் பரவலாக காணப்படுகின்றன. முதலாவது ஆங்க்சைடி என்படும் மனப்பதற்றம். அடுத்தது டிப்ரஷன் எனப்படும் மன வருத்தம். மூன்றாவது தற்கொலை எண்ணம்.

மன பிரச்னை உள்ளவர்களுக்கு அதுகுறித்து வெளியே தெரிந்தால் வேலையில் தொடர முடியுமா, திருமணம் ஆகுமா, தனிமைப்படுத்தப்பட்டு விடுவோமா என்று பல்வேறு தேவையற்ற அச்சங்கள் ஏற்படும். இதனால், சிகிச்சையை தள்ளிப்போடுகின்றனர். நோய் முற்றிய நிலையில் தற்கொலை போன்ற விபரீத முடிவுக்குச் செல்கின்றனர்.

இப்பிரச்னை இருப்போர் குடும்பத்தினர் அல்லது நெருங்கிய நண்பர்களிடம் மனம் விட்டு பேச வேண்டும். இதுவே மன பாரத்தை குறைக்க உதவும். தீவிர நிலை நோயாளிகளுக்கு மருத்துவ உதவி வேண்டும்.

மருந்து, மாத்திரைகளுடன் தொடர் ஆலோசனை, தனிப்பட்ட சிகிச்சை, குழு சிகிச்சை அளித்து குணப்படுத்தலாம். மனம் என்பது கண்ணுக்கு தெரியாத, ஆனால், உடலின் ஒரு உறுப்பு என்பதை உணர வேண்டும்.

உடலின் பிற உறுப்புகளுக்கு எவ்வாறு மருத்துவ கவனிப்பு தேவைப்படுகிறதோ, அதேபோல், மனநல பிரச்னைகளுக்கும் மருத்துவ கவனிப்பு அவசியம்.

பெரும்பாலான மன நோய்களை குணப்படுத்துவது எளிது. செலவும் மிக மிக குறைவு; பக்க விளைவு இருக்காது.

கே.எம்.சி.எச்.,ல் இச்சிகிச்சைக்கான அனைத்து வசதிகளும் உள்ளன. மனநல ஆலோசனை தேவைப்படுவோர், 87548 87568, 0422 4324151 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம்.

இ வ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us