Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அவசர கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகார்களில் மின்துறை புகாரே அதிகம்

அவசர கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகார்களில் மின்துறை புகாரே அதிகம்

அவசர கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகார்களில் மின்துறை புகாரே அதிகம்

அவசர கட்டுப்பாட்டு அறைக்கு வந்த புகார்களில் மின்துறை புகாரே அதிகம்

ADDED : மே 27, 2025 10:24 PM


Google News
கோவை : கோவை கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும், கோவை மாவட்ட பேரிடர் மேலாண்மை மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறைக்கு, நேற்று 32 புகார்கள் வந்தன.

கோவை மாவட்டத்தில் தென்மேற்குப்பருவமழை தீவிரமடைந்துள்ளது. மழை பெய்வதும் பலத்த காற்று வீசுவதும் தொடர்வதால் மின்கம்பங்கள் சாய்வதும், மின்கம்பிகள் துண்டாவதும், மரக்கிளைகள் உடைந்து கம்பிகள் விழுந்து, 'ஷார்ட் சர்க்யூட்' ஏற்படுவதும் தொடர்கிறது.

இது தொடர்பாக, கோவை கலெக்டர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும், அவசர கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மட்டும், 32 புகார்கள் வந்தன.

அதில் மின்தடை, மின்வெட்டு, மின்கம்பி மீது மரக்கிளைகள் விழுந்து மின் தடை ஏற்பட்டது, மின்கம்பி அறுந்து விழுந்தது. மின்கம்பம் சாய்ந்தது போன்ற, மின்துறை சார்ந்து 19 புகார்கள் வந்தன.

அவை அந்தந்த நிர்வாக பொறியாளர் அலுவலகங்களுக்கு தெரிவிக்கப்பட்டு, உடனுக்குடன் சரிசெய்யப்பட்டன.

மரங்கள் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது தொடர்பாக, 8 புகார்கள் வந்தன. உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது.

மழைநீர் மற்றும் கழிவுநீர் குடிநீரோடு கலந்ததாக, மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளிலிருந்து இரண்டு புகார்கள் வந்தன. மாநகராட்சி நிர்வாகத்தால் சரிசெய்யப்பட்டது.

அதே போல் மழைநீர் தேங்கி நிற்பதாக, மூன்று புகார்கள் வந்தன. மாநகராட்சி கழிவுநீர் அப்புறப்படுத்தும் லாரிகளை கொண்டு, உறிஞ்சி அப்புறப்படுத்தப்பட்டது.

இது போல் மழை பாதிப்பு குறித்து மக்கள், 1077 என்ற எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம் என்று, மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us