/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பாலத்தில் கான்கிரீட் தடுப்பு சுவர் : பொதுமக்கள் மகிழ்ச்சிபாலத்தில் கான்கிரீட் தடுப்பு சுவர் : பொதுமக்கள் மகிழ்ச்சி
பாலத்தில் கான்கிரீட் தடுப்பு சுவர் : பொதுமக்கள் மகிழ்ச்சி
பாலத்தில் கான்கிரீட் தடுப்பு சுவர் : பொதுமக்கள் மகிழ்ச்சி
பாலத்தில் கான்கிரீட் தடுப்பு சுவர் : பொதுமக்கள் மகிழ்ச்சி
ADDED : பிப் 12, 2024 12:10 AM

மேட்டுப்பாளையம்;சிறுமுகை அருகே, கைப்பிடி சுவர், இடிந்த நிலையில் இருந்த பாலத்தில், கான்கிரீட் தடுப்பு சுவர் அமைத்ததால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
சிறுமுகை அருகே நீலிபாளையம் சாலையில், பகத்தூரில் ஏழு எருமை பள்ளத்தின் குறுக்கே, 1983ம் ஆண்டு உயர் மட்ட பாலம் கட்டப்பட்டது. கடந்த, 40 ஆண்டுகளாக இப்பாலத்தின் வழியாக பொதுமக்கள் சென்று வருகின்றனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், அன்னூர், அவிநாசி, மோப்ரிபாளையம் கூட்டு குடிநீர் திட்ட குழாயை, இப்பாலத்தின் அருகே, ஏழு எருமை பள்ளத்தின் வழியாக கொண்டு செல்ல, பில்லர்கள் அமைத்து, அதன் மீது கான்கிரீட் தளம் அமைத்தனர்.
அப்போது குழாய் அமைக்க இடையூறாக இருந்த, பாலத்தின் கைப்பிடி சுவற்றை இடித்தனர். திட்டப்பணிகள் முடிந்து ஓராண்டுக்கும் மேலாகியும், பாலத்தின் கைப்பிடி சுவற்றை, குடிநீர் வடிகால் வாரியம் கட்டாமல் இருந்தது.
மேலும் பாலம் கட்டி, 40 ஆண்டுகள் ஆனதால், கைப்பிடி சுவர்கள் இடிந்த நிலையில் இருந்தது. இது குறித்து தினமலரில்,படத்துடன் செய்தி வெளியானது. செய்தியின் எதிரொலியால் நெடுஞ்சாலை துறை நிர்வாகம், பாலத்தின் மீது இரு பக்கம் உயரமாக கான்கிரீட் கைப்பிடி தடுப்பு சுவரை அமைத்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,' ஏழு எருமை பள்ளத்தின் குறுக்கே கட்டியுள்ள, பாலத்தின் மீது இருந்த கைப்பிடி சுவர் உடைந்து இருந்தது.
அதனால் இவ்வழியாக வாகனங்களில் செல்பவர்களுக்கு ஆபத்து ஏற்படுமோ என்ற அச்சத்தில் தினமும் இருந்தோம். தற்போது பாலத்தில் தடுப்பு சுவர் கட்டியதால், வாகனங்களில் செல்பவர்களுக்கு பாதுகாப்பாக இருப்பது, மகிழ்ச்சியை அளிக்கிறது,' என்றனர்.