/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மூதாட்டி சடலத்தின் மூக்கறுத்து கொடூரம் மூதாட்டி சடலத்தின் மூக்கறுத்து கொடூரம்
மூதாட்டி சடலத்தின் மூக்கறுத்து கொடூரம்
மூதாட்டி சடலத்தின் மூக்கறுத்து கொடூரம்
மூதாட்டி சடலத்தின் மூக்கறுத்து கொடூரம்
ADDED : அக் 21, 2025 12:51 AM
போத்தனூர்: கோவைபுதூர் அடுத்து அறிவொளி நகர் அருகேயுள்ள, அண்ணா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன்.
இவரது தாய் சரஸ்வதி, 75. கடந்த ஒரு மாதமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். நேற்று முன்தினம் மூக்கில், சிறு காயத்துடன் இறந்து கிடந்தார்.
சரஸ்வதியின் உறவினர் செந்தில்குமார் புகாரில், மதுக்கரை போலீசார் விசாரணை நடத்தினர்.
இதில், சரஸ்வதி நெஞ்சு வலியால் உயிரிழந்ததும், மனமுடைந்த மகன் ராஜேந்திரன், கையை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றதும் தெரியவந்தது.
தாயின் சடலத்தை அடக்கம் செய்வதற்கான செலவுக்காக, கத்தியால் அவரது மூக்கை அறுத்து, மூக்குத்தியை எடுத்ததும் தெரியவந்தது.


