ADDED : ஜூன் 23, 2025 11:54 PM
கோவை; கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், 27ம் தேதி காலை, 10:30 மணிக்கு மாமன்ற சாதாரண கூட்டம் நடக்கிறது.
மேயர் ரங்கநாயகி தலைமையிலும், கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையிலும் நடக்கும் இக்கூட்டத்தில், 24 மணி நேர குடிநீர் திட்டத்துக்காக தோண்டப்பட்ட ரோடுகளை சீரமைத்தல், மண்டல அலுவலகங்களில் ஒப்பந்த அடிப்படையில் கம்ப்யூட்டர் விவரங்கள் பதிவாளர், தொழில்நுட்ப உதவியாளர்கள் பணியமர்த்தல் உட்பட, 39 தீர்மானங்கள் அனுமதி வேண்டி, விவாதத்துக்கு முன்வைக்கப்படுகிறது.